பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 நிை னவு அ ை. |

‘முந்தியது அதிகமாகவும் பிந்தியது குறைவாகவும் இருப்பது போதும். ஆனால், எல்லோருக்கும். வேலைப்பயிற்சி கொடுப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு திட்டமிடவேண்டும்.

‘மொழிகளைப் பொறுத்த மட்டில், தாய்மொழி பாடமொழியாக இருப்பதே முறை.

‘இதுவரை இருப்பதுபோல். முதல் வகுப்பில் தாய்மொழியைக் கற்பிக்கத் தொடங்கலாம்.

‘ஆங்கிலத்தை ஆறாம் வகுப்பில் தொடங்கும் மரபு நீண் து அதைக் கலைக்கவேண்டும்.

‘ஆனால், ஏழைகள் படிக்கும் உயர் தொடக்கப் பள்ளிகளிலும் அதே நிலையில் ஆங்கிலத்தைக் கற்பிக்கவேண்டும்.

‘இந்தி மொழியைப் பொறுத்த மட்டில், அது எப்படியே மக்களிடையே பெரியதோர் வழக்கில் மாட்டிக்கொண்டு இருக்கிறது

‘ஆயுள் ஒப்பந்தம் செய்து கொள்பவர்களுக்கு, ஒப்பந்தத் தொகை குறிப்பிட்ட அளவிற்குக் குறையாதிருந்தால், குறிப்பிட்ட . ஆண்டுகளுக்காவது, கட்டணம் செலுத்தியிருந்தால், ஒப்பந்தத்தை, தொடராவிட்டாலும் முறிவு மதிப்பு என்று ஒரு தொகையைக கொடுப்பார்கள்.

‘'ஆறாம் வகுப்பில் இருப்போரைவிட ஒன்பதாம் வகுப்பியல் கற்போர், ஒரளவு உலகம் அறிந்தவர்களாக இருப்பார்கள்.

‘அவர்களின் பெற்றோர்களுக்கும் மற்றவர்களைவிட அதிகமான தொலைநோக்கு இருக்கும்.

‘எனவே, ஒன்பதாம் வகுப்பிலிருந்து-நான்காம் படிவத்திலிருந்து விரும்புவோருக்கு மட்டும் இந்தி சொல்லிக் கொடுக்கலாம்.

‘அம்மொழியில் தேர்ச்சி பெற்றால்தான் மேல் வகுப்பிற்குப் போகலாம் என்று மிரட்டத் தேவையில்லை; சிலராவது மிரளாமல் படிக்கத் தொடங்கினால் மெல்ல மெல்ல பலரும் படிக்க முன் வருவார்கள். --

‘கீழ் வகுப்பு மாணவர்களைக் காட்டிலும் மேல் வகுப் படித்தவர்களில் அனைத்திந்திய தொடர்பு அதிகமாகலாம்.

‘அதனால், முயன்று கற்போர், ‘முறிவு மதிப்பாவது பெறும் வாய்ப்பு கிட்டும். படிப்பு வீணாகாது. ‘

இப்படி நான் கருத்து கூறினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/258&oldid=623162" இலிருந்து மீள்விக்கப்பட்டது