பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T246 நினைவு அலைகள்

அவினாசி லிங்கனார் சாதனைகள்

அமைச்சர் திரு. அவினாசிலிங்கனார், கல்வியே கருத்தாகக் கொண்டவர்; இந்தியக் கல்வி பற்றி, அதைப் பிடித்து உள்ள நோய்கள் பற்றிச் சரியாகத் தெரிந்து வைத்திருந்தவர்; கல்வி பற்றி அவருடைய முற்போக்குச் சிந்தனைக்கு மேலே எவரும் செல்லவில்லை.

அவ்வளவு முன்னோடியாக, அவர்கள் செயல்பட்டார்கள்.

முதியோர் கல்வி-மக்கள் கல்லூரி

நூற்றுக்கு எண்பது பேர் வயது வந்தோர், தற்குறிகளாக உள்ள சூழ லில், சமுதாயத்தில் சிறுவர் சிறுமியர் படிப்பு முழு வெற்றியடையாது.

வீட்டில் உள்ள முதியோர் படிப்பது, குழந்தைகள் படிப்பிற்கு ஏற்ற இயற்கையான தூண்டுகோலாகும்.

இந்த உண்மையை முதலில் உணர்ந்தவர் திருவாளர் அவினா சிலிங்கம்.

சென்னை மாகாணத்தின் ஒவ வொரு மாவட்டத்திலும் பல முதியோர் எழுத்தறிவுப் பள்ளிகளைத் தொடங்க ஆணை இட் அவரது தொலைநோக்கு போற்றற்குரியது.

ஏற்கெனவே எட்டாவதுவரை படித்து நின்றவர்கள், தொடர் கல்வி பெறும் பொருட்டு, மக்கள் கல்லூரிகள் (ஜனதா கல்லூரிகள்) நடத்தும் திட்டத்தைக் கொண்டு வந்தவர் அம் முன்னோடி.

ஒரு காலத்தில் நலிவுற்றிருந்த டென்மார்க் என்ற நாடு, இத்தகைய ‘மக்கள் கல்வி நிலையங்களால்தான் பரவலான அறிவு ஒளிவிடும் வளம் மிகும் நாடாக மாறிவிட்டது.

அத்தகைய ஓய்ந்த நேரக் கல்வி நிலையங்களின் அருமை, பெருமை, வற்றாத சாத்தியக்கூறுகள் ஆகியவற்றைக் கிணற்றுத் தவளைகளாகிய நாம் உணரவில்லை.

அய்யா, அவினாசிலிங்கனார் உணர்ந்தார். பல ஊர்களிலும் தொடங்க ஆணையிட்டார்.

கல்வி என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்து கிடக்கும் எல்லா ஆற்றல்களையும் வெளிப்படுத்த வழி செய்தலாகும்.

அறிவுக்கூறு மட்டுமல்ல மாந்தரின் உடைமை; செயல் திறனும் செயல் துடிப்பும் அவர்களின் சொத்தாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/262&oldid=623167" இலிருந்து மீள்விக்கப்பட்டது