பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விங் த சுந்தாவடி வேலு 251

10 1-48 அன்று அண்ணல் காந்தி அடிகள் மறைந்ததைக் கேட்டு, _பகம் அழுதது; மன்னர்கள் இரங்கினார்கள்; நாடாளும் தலைவர்கள் _n வணங்கினார்கள்; பொது மக்கள் கண்ணிர் வெள்ளத்தில் தெந்தார்கள்.

காந்தி அடிகளாரின் பெருமை

அன்றைய அறிவியல் உலகமேதையின் இரங்கற் செய்தி இப்போது நினைவிற்கு வருகிறது.

‘காந்தியைப் போன்ற ஒரு மனிதர், நம்மோடு இருந்தார், | மாடினார், வாழ்ந்தார் என்று சொன்னால், வருங்கால சந்ததிகள் நம்ப மறுக்கும் என்று காந்தியடிகளின் சிறப்பை எடுத்துக் காட்டினார், _ப்ன்ஸ்டீன் என்னும் அறிவியல் மேதை.

ஆயிரங் காலத்திற்கு ஒரு முறை தோன்றும் அறவோர் ஆவார் காந்தியடிகள்.

அரசியல் ஒடையை நேர்மை, தூய்மை வெள்ளம் பாய்ச்சி, புரிதப்படுத்தியவர் காந்தி அடிகள்.

பிழைப்பிற்கு இடமாயிருந்த அரசியல் களத்தைத் தொண்டிற்கு _லைக்களமாக, தியாகத்தின் பட்டறையாக மாற்றிய பெரியார், காந்தி அடிகள்.

இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காகக் காலமெல்லாம் தவங்கிடந்த சான்றோர்; கடையரும் கடைத்தேறவே தன்னாட்சி என்று நாள்தோறும் நினைவு படுத்திய ஏழைபங்காளர்.

பளிங்கென விளங்கும் தன்னல மறுப்பின் உயிரோவியம்: _ள்ளமும், உரையும், சொல்லும், செயலும் ஒன்றாக இயங்கிய அயோன்.

இத்தகைய மாமனிதர் காட்டிய சுட்டுவிரல் கண்டல்லவா, இமயம் முதல் குமரிவரை பட்டம் பெற்றோர் முதல், படிப்பறியார் வரை ஆண்களோடு பெண்களும்-இடர்மிகு சிறைப்பட்டார்கள்! விடுதலை பவள்வியில் குதித்தார்கள் மண்ணாங் கட்டிகளாகக் கிடந்த பலட்சோப இலட்சம் மக்களை உரிமை வேட்கை கொண்ட, நாட்டு நலனைக் கருத்தில் ஏற்ற வீரர்களை, காந்திய வழியில் எவர் | lதுவார்? எவர் நெறிப்படுத்துவார்? எவருடைய உண்ணா நோன்பு பொது மக்களை ஈர்த்துத் திருத்தும்.

இப்படி எண்ணங்கள் அலைமோதின, சோகம் புரட்டிற்று, தூக்கம் கெட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/267&oldid=623172" இலிருந்து மீள்விக்கப்பட்டது