பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 நினைவு அலைகள்

இந்த நூற்றாண்டின் இருபதுகளில் தமிழ்நாடு காங்கிரசு வானில் நட்சத்திரமாக ஒளிவிட்டவர்.

பெரியாருடைய சமுதாய சீர்திருத்தக் கருத்துகளுக்கும் வகுப்புரிமைக் கொள்கைக்கும் ஆதரவாக நின்றவர்.

பெரியார், தன்மான இயக்கங் கண்டபோது, அவரோடு சேர்ந்து பல்லாண்டு இணைந்து உழைத்தவர்.

பெரியாவின் ஆங்கில வார இதழின் ரிவோல்டின் ஆசிரியராகப் பணியாற்றியவர். குத்துாசி குருசாமி துணையாசிரியராக இருந்தார். இவ்விதழ் 2 ஆண்டு போல் ஈரோட்டிலிருந்து வெளிவந்தது. இவ்விதழில் நானும் ஒரு கட்டுரை எழுதியதாக நினைவு.

எஸ். இராமநாதன், பெரியாரோடு சோவியத் நாடு போன்ற மேனாடுகளுக்குச் சென்று வந்தவர்.

பெரியார் வகுத்த, ‘சுயமரியாதை சமதர்மத் திட்டம் பற்றி முணுமுணுக்கத் தலைப்பட்டார். பின்னர் அதை ஏற்றுக் கொண்டார்.

அந்தக் கீறலைக்கண்ட மூதறிஞர் இராசாசி, இராமநாதனை மீண்டும் காங்கிரசிற்கு இழுத்துக் கொண்டார்.

அதோடு 1937 இல் தாம் அமைத்த காங்கிரசு அமைச்சரவையில் இராமநாதனைச் சேர்த்துக் கொண்டார்.

சில ஆண்டுகளுக்குள் இராமநாதன் அரசியலில் இருந்து மெல்ல மெல்ல விலகிக்கொண்டார்.

கட்சிக்கட்டுகள் ஏதும் இல்லாத, மனித உரிமை, சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கருத்துகளுக்கு ஆதரவாளராக மாறி வாழ்ந்தார்.

இராமநாதன் இல்லத்தில் இரு திங்கள்

நான் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்தபோது திரு. இராமநாதனும், திருமதி இராமநாதனும் சாந்தோம் கடற்கரையில் ஒர் நல்ல பங்களாவில் குடி இருந்தார்கள்.

அங்குக் காலி அறைகள் இருந்தன. எனவே, தங்களோடு தங்கிக் கொள்ளும்படி எங்களை நேரில் அழைத்தனர்.

உடன்பட்டோம். ஏறத்தாழ இரு திங்கள் அவர் இல்லத்தில் அவர் விருந்தினராக இருக்கும் பேறுபெற்றோம்.

திங்கள் உரிமையோடு தங்கினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/272&oldid=623178" இலிருந்து மீள்விக்கப்பட்டது