பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெ.த. சுந்தாவடிவேலு 259

“வேறொன்று பற்றி மாநகராட்சிக்குச் சென்ற நான், தாழ்வாரத்தில் காத்து இருந்தேன். கதவுகளை அடைத்துவிட்டு இரகசியக் கூட்டம் நடத்திக் கொண்டு இருந்தார்கள்.”

‘சிறிது நேரத்திற்குப்பின் வெளியே வந்த உறுப்பினர் ஒருவர், ‘நெ.து. சுந்தரவடிவேலு கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார்’ என்று காத்திருந்த ஒருவரிடம் கூறினார்.

“அதை உறுதிப்படுத்திக் கொண்டு திருவல்லிக்கேணி பூக்கடைக்குச் சென்றேன்; மாலையை வாங்கிக் கொண்டு நேரே இங்கே வருகிறேன்’ என்று ஆசிரியர் கல்யாணசுந்தரம் உரைத்தார்.

மாநகராட்சி அலுவலுக்குத் தள்ள மாட்டார்கள் என்ற தெம்போடு இருந்த எனக்கு அந்தச் செய்தி, பேரிடியாக இருந்தது.

குத்துசி குருசாமி உறுதிப்படுத்தினார்

எப்படிச் செய்தியை உறுதிப் படுத்திக் கொள்வது? உண்மையானால் எப்படி அதிலிருந்து நழுவுவது ? இக்கேள்விகளை உரக்க எழுப்பினேன்.

அவ்வேளை, அண்ணன் குருசாமி வெளியே சென்றார். சில மணித்துளிகளில் திரும்பி வந்தார்.

‘இந்து நாளிதழின் அலுவலகத்தோடு தொலைபேசியில் பேசினேன். நீங்கள் மாநகராட்சி அலுவலராக நியமிக்கப்பட்டிருப்பது உண்மையே என்று உறுதிப்படுத்தினார். 03-03-1948 நாளைய இந்து நாளிதழ் என் நியமன விவரத்தை வெளியிட்டது.

இந்த நியமனம் எப்படி நேரிட்டது?

அதற்குச் சில திங்களுக்குமுன்மாநகராட்சிக் கல்வி அலுவலர் பதவி காலியாயிற்று. அவ்விடத்திற்கு அரசு ஊழியத்தில் உள்ள கல்வி அதிகாரி ஒருவரை நியமிக்க, மாநகராட்சி விரும்பியது. அதையொட்டி மூன்று மாவட்டக் கல்வி அலுவலர் கொண்ட பட்டியலை அரசிடம் கேட்டது.

அரசு அனுப்பிய பட்டியலில் முருகேச முதலியார், நரசிம்மலு நாயுடு, நெ.து. சுந்தரவடிவேலு ஆகிய மூவரின் பெயர்கள் இருந்தன.

மாநகராட்சி வாக்கெடுப்பின் வாயிலாக என்னை நியமித்தது. என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தேன். அடுத்த நாள் காலை பொதுக் கல்வி இயக்குநர் திரு. டி. சதாசிவரெட்டியைத் தேடிச் சென்றேன். கால தாமதமின்றிப் பேட்டி கிடைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/275&oldid=623181" இலிருந்து மீள்விக்கப்பட்டது