பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 நினைவு அலைகள்

அவர் அன்போடு வரவேற்றார். மேயருடைய அறைக்குப் போன்’ செய்தார். என்னை அழைத்துக்கொண்டு வரட்டுமா என்று கேட்டார்.

மேயர் சரியென்று சொல்லவும் ஆணையர் என்னை மேயரிடம் அழைத்துப்போய் அறிமுகம் செய்தார்.

மேயர் டாக்டர் யூ. கிருஷ்ணாராவ், இருக்கையில் இருந்து எழுந்து என் கையைப் பிடித்துக் குலுக்கினார். என்னை வரவேற்பதாகக் கூறி அமரச் சொன்னார்.

ஆணையரும் நானும் அவருக்கு எதிரில் அமர்ந்தோம்.

டாக்டர் யூ. கிருஷ்ணாராவும் அவருடைய தந்தை டாக்டர் யூ. ராமாராவும் சென்னையில் புகழ்பெற்ற டாக்டர்கள்.

காங்கிரசு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். நாவடக்கமும் கைத்துய்மை யும் பெற்றுச் சிறப்புடன் இருந்தார்கள்; இனிய இயல்பினர்கள்.

மேயர், ஆனையரைப் பார்த்து, ‘'கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் நெ.து. சு. வைப்பற்றிக் கூறியதை அவர் இடம் சொன்னிர்களா? என்று கேட்டார்.

‘இல்லை; அது உங்கள் மூலமாக அவருக்குத் தெரிவதே நல்லது என்று எண்ணிச் சொல்லாமல் அழைத்து வந்து இருக்கிறேன்’ என்று ஆணையர் அடக்கத்துடன் பதில் அளித்தார்.

அதைக் கேட்ட பிறகு, மேயர் கிருஷ்ணாராவ் சொன்ன செய்தி நான் எப்படி மாநகராட்சிக்கு அனுப்பப்பட்டேன் என்பதை தெளிவு படுத்தியது.

என்னைப் பற்றி அவினாசிலிங்கம் சொன்னதென்ன?

மேயர் என்ன சொன்னார்?

‘அரசிடம் இருந்து மூவர் அடங்கிய பட்டியல் வந்தது. மூவரில் ஒருவரை நாங்களாகவே தேர்ந்தெடுப்பதற்குப் பதில், கல்வி அமைச் சரைக் கலந்து அவருடைய ஆலோசனை பெறுவது நல்லது என்று நினைத்தோம். -

‘மாநகராட்சியை ஆளுங்கட்சியாகிய காங்கிரசின் மூத்த உறுப்பினர் களாகிய சர்தார் ஆதிகேசவலு நாயக்கர், கே. வேங்கடசாமி நாயுடு ஆகியவர்களை அழைத்துக்கொண்டு, நான் கல்வி அமைச்சரிடம் சென்றேன். வந்த காரணத்தை அமைச்சரிடம் சொன்னோம். பரிந்துரை கேட்டோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/278&oldid=623184" இலிருந்து மீள்விக்கப்பட்டது