பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 263

‘அவர், ‘உங்கள் விருப்பம்’ என்றார். மூவரில் மிகவும் தக்காரை நியமிக்க விரும்புகிறோம். அதனால்தான் வலிய வந்து கேட்கிறோம் என்றோம்.

‘மூவரில், நெ.து. சு. சிறந்தவர். அவர் நாணயமானவர்; நேர்மை யானவர்; வேலைக்குச் சுணங்காதவர்’ என்று கல்வி அமைச்சர் கூறினார்.

‘அவரையே எடுத்துக் கொள்ளுகிறோம்’ என்று சொல்லிவிட்டு வந்தோம். அப்படியே செய்து விட்டோம்.

‘நீங்கள் இந்தப் பதவியை ஏற்றுக் கொண்டது பற்றி மகிழ்ச்சி என்று கூறிவிட்டு மேயர் மேலும் தொடர்ந்தார்.

கிருஷ்ணாராவின் அறிவுரை

‘அந்த அமைச்சரிடம் இப்படிப்பட்ட நல்ல பெயர் எடுப்பது அரிது. இனி எடுத்துள்ள நற்பெயரைக் காத்துக் கொள்வதிலேயே குறியாக இருங்கள்; எவருக்காகவும் எதற்காகவும் அந் நிலையில் இருந்து இறங்கிவிடாதீர்கள். நானும் உங்களுக்குத் துணை நிற்கிறேன்.

‘'நாங்கள், மூன்றாண்டுக்கு ஒரு முறை மக்கள் தயவை நாட வேண்டியவர்கள். எனவே, என்னிடம் பரிந்துரைக்காகப் பலர் வரக்கூடும்.

‘அவர்களுடைய கோரிக்கைகளைப் பற்றி நாங்களே முடியாது என்று சொல்லி அனுப்பினால், விரைவில் எங்களுக்குப் பகைபெருகிவிடும்.

‘அதனால் முடியாத கோரிக்கைகளைக்கூட நானும் மற்றவர்களும் உங்கள் இடம் சொல்ல நேரிடலாம்.

‘நீங்கள் ஒரே ஒரு உதவி செய்தால் போதும் உங்கள் பட்டறிவின் பயனாக, கேட்பது, செய்யக்கூடாதது என்று நொடியில் புலப்படலாம்.

‘அப்போதும் வந்தவரை வைத்துக்கொண்டு, பளிச்சென்று முடியாது என்பதைச் சொல்லிவிடாதீர்கள். ‘கவனிக்கிறேன்’ என்று அவர்முன் சொன்னால் போதும். அப்புறம் எது சரியோ அதைச் செய்யுங்கள்.

‘எனக்கு அது பற்றித் தகவல் கொடுத்துவிடுங்கள்; நான் உரியவருக்குப் பதில் சொல்லிக் கொள்கிறேன். என் ஆதரவைப் பெறும் பொருட்டு நீங்கள் பெற்றுள்ள பெருமதிப்பை இழக்காதீர்கள்’ என்றார் மேயர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/279&oldid=623185" இலிருந்து மீள்விக்கப்பட்டது