பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"Μο Φι ανιδ95 σουις ("συgνι 267

எல்லாச் சாதிப் பிரிவுகளுக்கும் பங்கு கிடைக்கும்படி பார்த்துக் கொண்டேன்.

ஆணையர் என்னுடைய பரிந்துரைகளில் மனநிறைவு கொண்டார்.

மாநகராட்சி உறுப்பினரின் புரட்டு

ஒருநாள் ஆணையர் என்னை அழைத்தார். திடுக்கிடும் செய்தி ஒன்றைக் கூறினார். சிடுசிடுப்பின்றி, சிரிப்போடு கூறினார். செய்தி என்ன?

தெலுங்கு ஆசிரியர் ஒருவரைச் சில நாள்களுக்கு முன்பு நியமித்தோம்.

அவருடைய தந்தை, மாநகராட்சியில் தெரு பெருக்கும் வேலையில் இருந்தார்.

அப் பிரிவிலும் ‘சாமர்த்தியம் இல்லாதவர். எனவே, எவரையும் பிடித்துப் பரிந்துரை பெறத் தெரியவில்லை.

ஆகவே நான்கு ஆண்டுகளாக வேலைக்காகக் காத்திருந்தார். எவரும் அவரைக் கவனிப்பார் இல்லை.

நான் மாநகராட்சியில் சேர்ந்தபோது, தெலுங்கறிந்த தமிழன் என்று கேள்விப்பட்டு, அவர், என்னைக் கண்டு, ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்தார்.

அதன் மேல் நடவடிக்கை எடுத்தேன்; வேலையும் கொடுத்தேன். நியமன ஆணை வந்ததும் ஆசிரியரின் அப்பாவித் தந்தை மகனை அழைத்துக்கொண்டு அப் பகுதி நகரசபை உறுப்பினரிடம் சென்றார்.

அந்த உறுப்பினர் பழங்குடிப் பிரிவைச் சேர்ந்தவர். அந்த உறவு பற்றி அவரிடம் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள். அவ்வுறுப்பினரோ, அரசியலில் விளைந்தவர்.

நொடியில் கதை கட்டினார்; ‘வேலை வருது என்று எனக்குத் தெரியும். நானே சொல்லி அனுப்ப இருந்தேன். அதற்குள் நீயே வந்து விட்டாய்.

‘நீ எங்களவன் என்பதால் புதிய கல்வி அலுவலரைத் தேடி அய்ந்தாறு முறை அவர் வீடு சென்றேன்.

‘'நான் அடுத்தடுத்துச் சொன்னதால்தான் உனக்கு வேலை கிடைத்தது. அதற்கான ‘டாக்ஸி செலவு அய்ம்பது; ரிக்ஷாவில் போனதால் மதிக்க மாட்டார் என்று, டாக்ஸியில் சென்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/283&oldid=623190" இலிருந்து மீள்விக்கப்பட்டது