பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 நினைவு அலைகள்

“அதைக் கொடுத்துவிட்டு வேலையில் சேர்ந்துகொள்’ என்றாராம், தெரு பெருக்கும் வேலையில் சேரும்போது, அதே உறுப் பினருக்குப் பத்து ரூபாய் கொடுத்ததை அந்த அப்பாவி நினைத்துக் கொண்டார்.

எவரிடமோ கடன் வாங்கி, அய்ம்பது ரூபாய்களை உறுப்பினரிடம் செலுத்திவிட்டு, ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.

மூன்று நாள்களுக்குப் பின், ஆணையர் துப்புரவைச் சோதிக்கச் சென்றார்.

மேற்படி ஆசிரியரின் தந்தை அப்போது தெருகூட்டிக் கொண்டிருந்தார்.

ஆணையரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து கும்பிட்டார். மகனுக்கு வேலை கிடைத்ததை மகிழ்ச்சியோடு கூறினார். பேச்சு வாக்கில், உரிய உறுப்பினர் பெயரைச் சொல்லி, அவருக்கு அய்ம்பது ரூபாய் கொடுத்ததைக் கூறிவிட்டு,

‘'எதற்கும் காலம் வரவேண்டும் பாபு; இப்ப இளகின மனம், முன்னமே இளகி இருந்தால், நூறு இருநூறுகூடக் கொடுத்திருக்கலாம். நான்கு ஆண்டுகளாக எத்தனை பட்டினி’ என்றாராம்.

ஆணையர் அவரை குறுக்கு விசாரணை செய்தார்; கையூட்டு கொடுத்தது உண்மை என்பதை உணர்ந்தார்; என்னிடம் அதைச் சொல்லி, மேற்படி உறுப்பினர் அவ்வேலை பற்றி என்னிடம் ‘பரிந்துரைத்தாரா’ என்று கேட்டார்.

‘இல்லை’ என்றேன். ‘உறுப்பினர்களில் சிலர் அத்தகையோரே; அதை நாம் தெரிந்து இருப்பதாகக் காட்டிக் கொள்ளக்கூடாது; பகைமை பாராட்டவும் கூடாது’ என்று அறிவுரை கூறினார்.

கையூட்டுப் புற்றுநோய்

இது ஒரு புதிய அதிர்ச்சியான பாடம்; பரிந்துரை இல்லாத போதும் பணம் பண்ணுவோர் இருப்பதை உணர்ந்தேன்.

எவ்வளவு பெரியவர்கள், உயர்ந்தவர்கள் பரிந்துரைத்தாலும் அவருக்குத் தொடர்பு படுத்தியவர்களில் எவரோ ஒருவர் ‘வாணிகம் செய்திருக்கக்கூடும் என்பதைக் காலம் செல்லச் செல்லப் புரிந்து கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/284&oldid=623191" இலிருந்து மீள்விக்கப்பட்டது