பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 நினைவு அலைகள்

அதை ஆதரித்தவர்கள் நீதிக்கட்சியினர். அவர்கள் என்மேல் தொடர்ந்து பகை பாராட்டக்கூடாது என்று திரு. சங்கரன் விழைந்தார்.

ஒருநாள் பகல் உணவு வேளை, திரு. தாமோதரம் நாயுடுவைத் தம் அறைக்கு அழைத்தார்.

அவர் வந்ததும், இன்ன காரணத்திற்கு என்று சொல்லாமல், என்னை அங்கு அழைத்தார்.

திரு. நாயுடுவிற்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.

அவரைப்பற்றிச் சில பாராட்டுகளைக் கூறினார். அதைக் கேட்டபின் திரு. நாயுடு, “நீங்கள், இங்கு வரவிரும்புவீர்கள் என்று எவரும் சாடை காட்டவில்லை.

‘'அதோடு, காங்கிரசுக் கட்சி உங்கள் பெயரை முன்மொழிந்து ஆதரித்தது. அக் கட்சியின்மேல் உள்ள பகையால் உங்களுக்கு எதிராக ஒருவரை நிறுத்தினோம்’ என்றார்.

‘சென்றதை மறந்து விடுவோம்; பொது மக்கள் நலனை முன்னிறுத்தி ஒத்துழைப்போம்’ என்றேன்.

பகை தணியத் தொடங்கியது இப்படியே. இன்னும் சில உறுப்பினர் களோடு, துணை ஆணையர் அறையில் நிகழ்ந்த பேட்டிகள் என்பால் நல்ல எண்ணம் பரவ உதவிற்று.

அவர் வாழ்நாள் முழுதும் என்பால் மாறாத அன்பு கொண்டிருந்தார்.

நான் மூன்று ஆண்டுகளுக்குப்பின், கல்வித்துறைக்குத் துணை இயக்குநராக மாறி வரும்போது என்னை மாநகராட்சியிலே நிறுத்தி வைத்து, துணை ஆணையராக்க முயன்றார்.

அங்கு இருந்தால் இ.ஆ.ப. இல் இடம் பெறலாம் என்றார். நான் இலாப இழப்புக் கணக்குப் பார்க்கவில்லை.

கட்டுப்பாடே முதன்மை பெறவேண்டும் என்று சொல்லிவிட்டு, கல்வித் துறைக்கே திரும்பி வந்துவிட்டேன்.

அதன் பிறகும் எங்கள் நட்பு நீடித்தது. சிற் சிலபோது, என் வேலைக்காகத் தம் காரை அனுப்பியதுண்டு; அவரது அகால மரணம் எனக்குப் பேரிழப்பாகும்.

அவர் இருந்த வரையில், நெருக்கடி ஏற்பட்டால், ஆலோசனைக்கும் உதவிக்கும் தக்கவர் ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை ஊறிற்று:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/288&oldid=623203" இலிருந்து மீள்விக்கப்பட்டது