பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2721 நினைவு அலைகள்

‘கரும்பலகை வெளுத்திருக்கிறது; பள்ளிச்சுவர் கருத்திருக்கிறது; மேசை நாற்காலிகள் உடைந்து கிடக்கின்றன; கடிகாரம் இல்லை; துணைக்கருவிகள் இல்லை இப்படிக் குற்றங்குறைகளைக் கூறி, அவற்றை விரைந்து போக்க வேண்டுமென்று ஆணை இடுவதோடு முடிந்தது, அவர் வேலை.

சென்னை மாநகராட்சிக் கல்வி அலுவலர் பணி, அத்தகையது அல்ல; மற்றவர் காட்டும் குற்றங் குறைகளை, மீண்டும் சுட்டிக் காட்டுவதற்கு முன்பு, களைய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மாவட்ட ஆய்வாளர் மதிப்பீடு செய்து, இதையும் அதையும் செய்ய வேண்டும், என்று பொதுப்படையாகக் கூறிவிட்டால் போதும்.

மாநகராட்சிக் கல்வி அலுவலரோ செய்து முடிக்கவேண்டியவர்; பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருப்பவர்; என்னைப் பொறுத்த மட்டில் பெரியவர்களிடம் பெற்ற நல்ல மதிப்பீட்டைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அதிகப்படியான பொறுப்பும் சேர்ந்தது.

எனவே, அதிக சுறுசுறுப்போடு செயல்பட்டேன். மாநகராட்சி அலுவலர்கள் பெரும்பாலும் காலையில் களத் தணிக்கைக்குச் செல்வார்கள், பிற்பகல் அலுவலகத்தில் தங்கி அலுவல் பார்ப்பார்கள்.

நானும் முதலில் சில வாரங்கள் அப்படிச் செய்தேன்.

பிறகு 2 ஒரு நாள் காலை, மற்றோரு நாள் பிற்பகல், பிறிதொரு நாள் நடுப்பகல் என்று தணிக்கை முறையை மாற்றிக் கொண்டேன்.

‘இந்த நேரத்தில் அலுவலர் வரமாட்டார் என்று எண்ணி, பிற்பகலில் வேலைச் சுணக்கம் ஏற்படுவது குறைந்தது. முழு நாளும் விழிப்பாகச் செயல்படத் தொடங்கினார்கள்.

திடீர்த் தணிக்கையின்போது, கண்ட குறைகளை ஒளிக்காமல் அதற்கு உரிய பதிவு ஏட்டில் பதிந்து விடுவேன்.

அதோடு உரியவரைக் கூப்பிட்டு, ‘மீண்டும் திடீரென வருவேன். அப்போது நிலைமை திருந்தியிருக்கிறதா என்று பார்த்துவிட்டு, முதல் குறையை மன்னிப்பது பற்றி ஆலோசிப்பேன்’ என்று சொல்லிவிட்டு வருவேன்.

இந்த அணுகுமுறை நல்ல பலனைக் கொடுத்தது. பல மாநகராட்சிப் பள்ளிகள் ஒட்டடை படிந்திருந்தன; சுற்றுச் சூழல் அழுக்காயிருந்தன; பாட முறைப்படி பாடம் நடவாமை ஆகியன முதலில் அடிக்கடி கண்ட குறையாகும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/290&oldid=623206" இலிருந்து மீள்விக்கப்பட்டது