பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 நினைவு அலைகள்

அது என்ன சொல்லிற்று?

‘சில பள்ளிகளில் சேர வருகிற பிள்ளைகள் அனைவரையும் சேர்த்துக்கொள்ள விரும்பினாலும் இடவசதி, தளவாட வசதி ஆகியவை போதாமல் இருக்கலாம்.

‘அப்படிப்பட்ட நெருக்கடி ஏற்படும்போது, பள்ளிக்கூடம் முழு வதையுமோ, சில வகுப்புகளையோ ஷிப்டு முறையில் நடத்த நிர்வாகத்திற்கு உரிமை அளிக்கப்படுகிறது.

‘அப்படி நடக்கும் பள்ளிகளில் ‘விப்டு ஒன்று நான்கு மணிக்குள்ளாக இருக்க வேண்டும்; வாரத்திற்கு ஆறு நாள்கள் நடக்க வேண்டும்.

‘ஒவ்வொரு ‘விப்டு க்கும் தனித்தனி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்.

‘'அதே ஆசிரியர்களை இரண்டு ‘விப்டு களிலும் வேலை வாங்கக்

கூடாது. *

‘இரு ‘பிரிவு ஆசிரியர்களுக்கும் அரசின் நிதி அளிக்கப்படும்’ இப்படிப்பட்ட ஆணை ஏற்கெனவே வெளியாகி இருந்தது.

கல்வி உரிமை பொது உரிமை

திரு. ஓமந்துர் இராமசாமி ரெட்டியார் என்ற சீலர் சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராகவும், திரு. தி.சு. அவினாசிலிங்கம் அவர்கள் கல்வி அமைச்சராகவும் இருந்தபோது, பொது மக்களின் கல்வி உரிமை, அவர்களின் உடைமையாகவும் விளைய வேண்டும் என்று விரும்பினார்கள்.

உள்ள வசதிகளைக் கொண்டே ஏராளமானவர்களுக்கு உடனடி வாய்ப்புத் தரத் துடித்தார்கள்.

அதன் விளைவாக மேற்கூறிய, இரு ‘விப்டு பள்ளிகளுக்கு அனுமதி வழங்கும் ஆணை பிறந்தது. -

வேண்டியபோது ‘விப் டு முறையைப் பின்பற்ற அது அனுமதிக்கிறதே ஒழிய, அதைக் கட்டாயப்படுத்தவில்லை என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

இவ்வானை நினைவுக்கு வந்ததும், முந்திய ஆண்டு, பிள்ளைகளைச் சேர்க்க மறுத்த தலைமையாசிரியர்களை அழைத்தேன்; கலந்து பேசினேன்.

‘விப்டு ன் சாத்தியக் கூற்றை அவர்களுக்குக் காட்டினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/294&oldid=623210" இலிருந்து மீள்விக்கப்பட்டது