பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 நினைவு அலைகள்

‘இம் முறையினால் எங்கள் சுற்றுவட்டாரத்தில் உள்ள எல்லாச் சிறுவர் சிறுமியரையும் பள்ளிக்கு அனுப்பமுடியும். இது பொது நன்மைக்கு உதவி. ‘’

போதிய ஆசிரியர்களை உடனடியாகப் போடும்படி வேண்டிக் கொண்டு, விடை பெற்றுக் கொண்டார்கள்.

தாமதமின்றி ஆசிரியர்களும் போய்ச் சேர்ந்தார்கள்.

அதனால் ‘விப்டு முறை ஏற்புடையதாயிற்று. மேலும் சில பள்ளிகளுக்கும் பரவிற்று. இன்றும் எத்தனையோ பள்ளிகளில் செயல்படுகிறது.

தொலை பேசியில் புகார்

அந்தக் காலத்தில், மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்குத் தொலைபேசி வசதி கிடையாது. மாநகராட்சிக் கல்வி அலுவலகத்தில் அவ்வசதி உண்டு.

அலுவலர்களில் பலர், நேரே தொலை பேசியை எடுப்பதில்லை. நானோ, நேர்மாறான முறையைப் பின்பற்றினேன்.

தொலைபேசி மணி அடித்தால் நானே எடுத்துப் பேசுவேன்.

சென்னைப் பல்கலைக் கழக துணை வேந்தராக இயங்கிய போதும் உதவியாளரைத் தலையிட விடவில்லை; அவருக்கு அது குறை.

ஒரு நாள் பிற்பகல், ரிப்பன் கட்டடத்தில், என் அறையில் அலுவல் பார்த்துக் கொண்டிருந்தேன். தொலைபேசி மணி கேட்டது. எடுத்துப் பேசினேன்.

‘மாநகராட்சித் தொடக்கப் பள்ளி ஒன்றின் தலைமையாசிரியராகிய திரு. சுப்பிரமணியம் பிள்ளை பெரியார் கொள்கைக்காரர். இந்தியா பெற்றது விடுதலை அல்ல; விடுதலை நாளைக் கொண்டாடுவதில் பொருள் இல்லை என்று சொல்லும் தந்தை பெரியாரின் மதிப்பீட்டை ஏற்றுக் கொள்பவர்.

‘எனவே வருகிற விடுதலை நாளின் முதல் ஆண்டு விழாவைக் கொண்டாட விரும்பாது, அன்றைக்கும் முன்னாளும் விடுப்பு எடுத்துக் கொள்ளுகிறார். அதற்கான மனு, இப்போது உங்களுக்கு வந்து கொண்டிருக்கிறது. மாநகராட்சி ஊழியர், இப்படி நடக்கலாமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்று ஒருவர் என்னிடம் கருதினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/296&oldid=623212" இலிருந்து மீள்விக்கப்பட்டது