பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. சுட்டாலும் பொன் ஒளி குன்றாது

காலத்திற்கு ஒவ்வாத சட்டம்

மாநகராட்சிக் கல்வி அலுவலர் பதவி, நான் அஞ்சிய அளவு தொல்லை கொடுக்கவில்லை. காரணம்?

மன்ற உறுப்பினர்கள், நேர்மையாளனிடம் நேர்மையாகவே நடந்து கொண்டார்கள், கட்சிக் கண்ணோட்டமின்றி, நடுநிலைமையாளனாகப் பணி புரிந்த எனக்குப் போதிய முத்துழைப்பைத் தந்தார்கள்.

அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, மாநகராட்சிப் பள்ளிகளுக்குப் போதிய இடவசதி கிடையாது.

நான் அங்குப் பணிபுரிந்தபோது, அநேக பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் எழும்பின.

சென்னை மாநகராட்சிச் சட்டம் சென்ற நூற்றாண்டில் இயற்றப் பட்டது.

தொடக்கக் கல்விச் சட்டமோ, இந்த நூற்றாண்டில் இருபதாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.

முந்தையது பழைய சிந்தனையில் பிறந்தது. சென்னை மாநகராட்சிச் சட்டத்தில் தொடக்கக் கல்வி அளிக்கும் பொறுப்பு, நகர மன்றத்திடம் விடப்பட்டிருந்தது.

ஆனால், தொடக்கக்கல்வி என்பதற்குக் குறுகிய பொருள் கூறப்பட்டது.

அச் சட்டத்தில் அய்ந்தாம் வகுப்பு வரையில்தான் தொடக்கக்கல்வி என்று வரையறுக்கப்பட்டு இருந்தது.

ஆனால், பின்னர் உருவாக்கப்பட்ட தொடக்கக் கல்வி சட்டத்திலோ, எட்டாம் வகுப்புவரை தொடக்கக் கல்வி என்று கூறப்பட்டது.

பிந்தியதைக் கவனத்தில் கொண்டு, சில ஆண்டுகளுக்கு முன்னர், சில மாநகராட்சிப் பள்ளிகளை, உயர்தொடக்கப் பள்ளிகளாக (எட்டாவது வகுப்புவரை உள்ளனவாக) உயர்த்தினார்களாம்.

உரிய ஆண்டின் கணக்குகளைத் தணிக்கை செய்த அலுவலர், அந்தச் செலவு வரம்பு மீறியது என்று குறிப்பு எழுதிவிட்டார்.

மாநகராட்சி, மாகாண அரசுக்கு முறையிட்டது. மாகாண அரசு என்ன செய்தது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/299&oldid=623215" இலிருந்து மீள்விக்கப்பட்டது