பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 - நினைவு அலைகள்

தணிக்கையாளர் எடுத்த நிலை சரி என்றது.

ஆனால், மாநகராட்சியிடம் தனித் தீர்மானத்தைப் பெற்றுக் கொண்ட, குறிப்பிட்ட பள்ளிகள் உயர்தொடக்கப் பள்ளிகளாகத் தொடர இசைவு தந்தது.

அப்படி நடந்து பல்லாண்டுகள் கழிந்த பின், நான் மாநகர ஆட்சிக்குப் போய்ச் சேர்ந்தேன்.

காலத்திற்கேற்ற இந்தியக் குறிக்கோள்

நம் அரசியல் அமைப்புச் சட்டத்தின் நெறிக்கொள்கை எட்டாவது வகுப்புவரை இலவசக் கல்விக்கு ஏற்பாடு செய்யச் சொல்லிற்று.

அக் குறிக்கோள் சட்டமானபிறகு பல பகுதிகளில் உயர் தொடக்கப் பள்ளிகள் கேட்டார்கள்.

அத் தேவையை நானும் உணர்ந்தேன். தாராளமாகப் பரிந்துரைத் தேன்.

அதிலுள்ள சிக்கல் கல்வித்துறையில் எவருக்கும் தெரியவில்லை. கணக்குத் தணிக்கைத்துறையோ பழைய கோப்பைத் தேடி எடுத்தது; சட்டச் சிக்கலைக் சுட்டிக் காட்டிற்று.

பழையபடி சென்னை மாகாண ஆட்சியிடம் தனி இசைவு பெறும்படி ஆணையருக்குப் பரிந்துரைத்தேன்.

அவர் புதிய குறிக்கோளைச் சுட்டிக் காட்டி ஏற்றுக்கொண்டு, நகர் மன்றத்திற்குப் பரிந்துரைத்தார். மன்றமும் ஒப்புக் கொண்டது.

அரசின் இசைவோடு பல தொடக்கப் பள்ளிகளை உயர் தொடக்கப் பள்ளிகளாக மாற்றும் மகிழ்ச்சியில் எனக்கும் பங்கு கிடைத்தது.

மாநகராட்சி, அவ்வப்பொழுது, மாகாண ஆட்சியோடு, நேரடிக் கடிதத்தொடர்பு கொள்ளும்.

அரசுக்குப் போகும் கடிதங்களின் நகல்களை அந்தந்தத் துறையே ஆயத்தம் செய்யும்.

அதை, ஆணையர் சரி பார்த்தபின் மேயர் பார்வையிடுவார். பிறகு அது அரசுக்குச் செல்லும்.

கல்வித்துறை பற்றிய கடிதங்களை ஆயத்தம் செய்வதில், எனக்கு வழிகாட்டியவர் ஆணையர் திரு. நரசிம்மம் ஆவார்.

அவரிடம் வேலை பார்த்தது எனக்கு நல்ல பயிற்சியாக அமைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/300&oldid=623218" இலிருந்து மீள்விக்கப்பட்டது