பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து. சுந்தரவடிவேலு 285

நான் மாநகராட்சிப் பணிக்குச் சென்ற ஒராண்டில், பொதுத் தேர்தல் வந்தது. புதிய உறுப்பினர்கள் பொறுப்பு ஏற்றார்கள்.

திரு.வி.க. வுக்கு மாநகராட்சி வரவேற்பு

அவர்களில் ஒருவர், என் கல்லூரி நண்பர் திரு. எஸ் இராமசாமி நாயுடு.

அவர் 1948 ஆம் ஆண்டு நவம்பரில் மேயராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அவர் என்னிடம் பாசத்தோடு பழகினார்.

திரு. எஸ். இராமசாமி நாயுடுவிற்குத் தமிழ்ப்பற்று மிகுதி. அவர் மேயராக இருந்தபோது, தமிழ்த்தென்றல், திரு. வி. கலியான சுந்தரனாருக்கு மாநகராட்சியின் சார்பில் வரவேற்புப் பத்திரம் வாசித்தளித்துச் சிறப்புச் செய்தார்.

அந் நிகழ்ச்சியின்போது, மாநகராட்சியின் தலைமை அலுவலர்களில் ஒருவன் என்ற முறையில் என்னை இராயப்பேட்டை முனிவருக்கு அறிமுகப்படுத்தியும் வைத்தார்.

பிற்காலத்தில், தந்தை பெரியாருக்கும் அத்தகைய சிறப்பு செய்தது. அப்போது நான் சென்னை மாநகராட்சி அலுவலில் இல்லை.

மேயரின் பதவிக்காலம் ஒராண்டே. எனவே, 1949 நவம்பரில்,

டாக்டர் செரியன் மேயரானார். 1950 நவம்பரில் இன்றைய செட்டி நாட்டு அரசரின் இளவல், திரு. இராமநாதன் செட்டியார் மேயர்ஆனார்.

எனக்குக் கிடைத்த பாராட்டு

டாக்டர் செரியன் மேயராக வீற்றிருந்தபோது, மாநகராட்சி வரவு செலவுத் திட்டத்தை விவாதித்த வேளை அலுவலர்கள் அனைவரும் வழக்கம்போல அவையில் எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் உட்கார்ந்திருந்தோம்.

உரையாற்றிய பலர் என்னைப் பெரிதும் பாராட்டிப் பேசினர்.

அதை எதிர்பார்த்தேன். ஏன்? அதற்குச் சில திங்களுக்கு முன்பே என்னை மேலும் இரண்டு ஆண்டுக்கு மாநகராட்சிப் பணியில் விட்டு வைக்குமாறு அரசிடம் கோருவதாக ஒருமனதாக முடிவு செய்து அனுப்பியிருந்தார்கள்.

அதோடு, மற்ற அலுவலர்களுக்குக் கொடுப்பதுபோல், எனக்கும் மாதம் 750 ரூபாய் சம்பளமாகத் தர ஒப்புதல் கேட்பதற்கும் முடி எடுத்தார்கள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/301&oldid=623219" இலிருந்து மீள்விக்கப்பட்டது