பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 நினைவு அலைகள்

அப்படி முடிவு செய்தது இரகசியக் கூட்டத்தில். கூட்டம் முடிந்த பிறகு சம்பளம் பற்றிய செய்தி என் காதில் வீழ்ந்தது. அப்பரிந்துரையைக் கண்டால் அரசின் மட்டத்தில், என்னைப் பற்றித் தவறாக நினைக்கக் கூடுமென்று அஞ்சி அதை ஆணையரிடம் வெளியிட்டேன்.

ஆணையர் அப்படி அஞ்சத் தேவை இல்லையென்று ஆறுதல் கூறினார். எனக்குப் பதவி நீடிப்பு ஆணை வந்தது.

சம்பளம் என்ன?

மாவட்டக் கல்வி அலுவலராக வாங்கிய சம்பளத்தோடு கூடுதலாக இருபத்தைந்து விழுக்காடே கொடுத்தார்கள். (300+75) முந்நூற்று எழுபத்தைந்தே பெற்றேன். இருப்பினும் மனநிறைவோடு பணியில் தொடர்ந்தேன்.

அந்நிலையில், மேற்கூறிய மாமன்றத்தின் வரவு செலவு கூட்டம் நடந்தது.

அதில், எனக்கு அறிமுகமில்லாத ஒருவர் என்னைப் பாராட்டிப் பேசினார்.

வழக்கறிஞர் வி.சி. கோபாலரத்னம் பாராட்டினார்

‘சென்னை மாநகராட்சியின் கல்வித் துறை நிர்வாகத்தை எவ்வளவு போற்றினாலும் தகும்.

‘'நான் அய்ம்பது ஆண்டுகளாகச் சென்னையில் குடியிருப்பவன். மாநகர் ஆட்சிப் பள்ளிகள் தரக்குறைவின் அடையாளங்கள் என்று முன்னர்க் கேள்விப் படுவதுண்டு. அவற்றில் ஒழுங்கு, கட்டுப்பாடு கிடையாது என்பார்கள்.

‘இப்போது மாநகராட்சிப் பள்ளியின் தரம் எல்லோராலும் போற்றப்படுகிறது. ஒழுங்கும் கட்டுப்பாடும் உயர்ந்து உள்ளன.

‘முதல் முறையாக, அப் பள்ளிகளில் இருக்கும் ஆசிரியைகளுக்கு எவராலும் தீங்கு நேரிடாது என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

‘அரசு அலுவலில் இருந்து எவரோ ஒருவர் நகராட்சிக்கு, கல்வி அலுவலராக வந்திருக்கிறாராம். அவர் அடிக்காமலேயே வேலை வாங்குகிறாராம். so

‘அந்த ‘மந்திரவாதி'யை நான் பார்த்தது இல்லை ஆனாலும் தயங்காமல் அவரைப் போற்றுகிறேன். - இப்படிப் பாராட்டியவர் எவர்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/302&oldid=623220" இலிருந்து மீள்விக்கப்பட்டது