பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 நினைவு அலைகள்

‘மனம்போல் வாழ்வு’ மெய்யறம் போன்ற நூல்களைச் சிதம்பரனார் மொழி பெயர்த்திருந்தார்.

அவற்றை வாவில்ல இராமசாமி சாஸ்திரி என்ற தெலுங்கம் வெளியிட்டிருந்தார். ஒவ்வொன்றின் விலை அரை ரூபாய். அவற்றையும் சேர்த்துப் பட்டியல் போட்டேன்.

ஒவ்வொரு வெளியீட்டுக்காரருக்கும் ஆணை அனுப்புவதற்குப் பதில், எல்லா நூல்களையும் வாங்கித் தரும்படி, சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்கே ஆணை அனுப்பினேன்.

மூன்று நாள்கள் கழிந்தன. திரு. சுப்பையா பிள்ளை என்னைத் தேடி வந்தார். ‘"சிதம்பரனார் நூல்களுக்குப் பதில் வேறு நூல்கள் வாங்கிக்கொடுக்கலாமா? என்று கேட்டார்.

‘அவை கிடைக்காதா?’ என்றேன். ‘கிடைக்கும் இருந்தாலும்....’ என்று இழுத்தார் திரு. சுப்பையா. ‘எல்லா நூல்களையும் வாங்கிக் கொடுப்பதானால் சரி; இல்லா விட்டால், ( ( ஆணையையும் வேறு யாருக்காவது மாற்றிவிடுவேன்’ என்றேன்.

இரு நாள்களில் எங்கேயோ தேடி எல்லா நூல்களையும் கொண்டு வந்து ஒப்படைத்தார்.

படிப்பகங்கள் நூலகங்களாக மாறின. பிற்காலத்தில் அவை பொது நூலக இயக்ககத்தில் இணைந்துவிட்டன.

முதியோர் பள்ளிகள்

நான் மாநகராட்சிக் கல்வி அலுவலராக இருந்தபோது, நகர் மன்றம், முப்பது முதியோர் எழுத்தறிவிப்பு நிலையங்களை நடத்தி வந்தது.

நகர்மன்றப் பள்ளிகளில் முதியோர்க்கான இரவுப் பள்ளிகள் நடந்தன.

பகலில் வேலை செய்யும் ஆசிரியர் ஒருவருக்குக் கூடுதல் சம்பளம் கொடுத்து அப் பணியில் ஈடுபடுத்தி இருந்தோம்.

கற்போர்க்கான பாடநூல், பலகை, முதலியவற்றை நகர்மன்றம் தன் செலவில் கொடுத்தது. படிப்பவருக்கு முயற்சியும் நேரமுமே செலவு.

அதில் ஒரு குறை கண்டேன்.

என்ன குறை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/304&oldid=623222" இலிருந்து மீள்விக்கப்பட்டது