பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-o-o/, சுந்தர வடிவேலு 289

தொடக்கப் பள்ளிக் குழந்தைகளின் பாடநூலையே பின் பற்றியது. அது பொருத்தம் அல்ல. முதியோர் எழுத்தறிவிற்குத் தனிப்பாட நூல்கள் தேவை. அது இல்லாதபோது? குழந்தைகள் நூலைப் பின்பற்றினார்கள். கற்போர் அதை விரும்பவில்லை என்று கேள்விப்பட்டேன். நான் கண்ட மாற்று என்ன? படிக்கும் முதியவர்கள் என்னென்ன சொற்களைக் கற்க விரும்புகிறார்கள்? அதைக் கேட்டறியுங்கள்.

அச் சொற்கள் கொண்ட அட்டைகளை ஆயத்தம் செய்யுங்கள்; பயன்படுத்துங்கள். இப்படி ஆலோசனை கூறினேன்.

ஆசிரியர்கள் அப்படியே பின்பற்றினார்கள். அதிலும் ஒரு சிக்கல் ாழுந்தது.

தெலுங்கு கற்பிக்கும் முதியோர் பள்ளிகளில் அவர்கள் எத்தகைய சொற்களை விரும்பினார்கள்.

ஆந்திர மாநிலம் கோரிய தலைவர்கள் பெயர்கள், அவர்கள் செயல்கள் பற்றிய சொற்களைக் கற்க விரும்பினார்கள்.

தெலுங்கு ஆசிரியர்கள் அச்சங் கொண்டார்கள். அத்தகைய சொற்களைக் கற்றுக் கொடுத்தால், தமக்குத் தீங்கு வருமோ, என்று அஞ்சினர்.

நான் ஊக்கமூட்டினேன். பாடத்தை அரசியல் வகுப்பாக்கி விடவேண்டாம் என்று மட்டும் எச்சரித்தேன்.

பலண் உண்டா?

இரவுப் பள்ளிகளுக்கு இருபது பேர்கள் கூட வருவதில்லை. அவ்வளவு குறைந்த வருகையை வைத்துக் கொண்டு, முதியோர் கல்வி மையங்களை நடத்த வேண்டாம் என்று, மாநகர் ஆட்சி | yப்பினர்கள் சிலர் கருதினார்கள்.

நாட்டுப்புறப் பகல் நேரப் பள்ளிகள் பலவற்றில்கூட இருபதிற்கும் குறைந்த வருகை தொடர்கிறது. சில இடங்களில் ஆண்டுக் கணக்கில் தொடர்கிறது.

அதிகப்படியான கண்டிப்பைக் காட்டாமல், அவற்றை எடுக்கா

விருப்பதால், ஊருக்கு நாலு பேர்களாவது எழுத்து அறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/305&oldid=623223" இலிருந்து மீள்விக்கப்பட்டது