பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_து கந்தரவடிவேலு 291

‘எழுத்தறிவு பெரும் அறிவாக வாய்ப்பு கொடுத்துவிட்டால், முறைப்படி சொல்வதைக் கேட்கும் பொறுமையை அலுவலர்கள் பெற்றுவிட்டால், அப்புறம் மொட்டைக் கடிதங்கள் குறையும்’ என்று

அமைச்சருக்குப் பதில் கூறிவிட்டேன்.

கடைசிவரை இருந்து கேட்ட அமைச்சர் வெகுளவில்லை; கல்வி அமைச்சரிடம் புகார் சொல்லவில்லை; பழி வாங்க முயலவில்லை. _ாலும் பொன் பொன்னேயாகும்.

38. பெரியவர்கள் வாக்குறுதியும் மீறலும்

வஃகு மனிதர் படேலின் சாதனை

நான் சென்னை மாநகராட்சியில் 1948 ஆம் ஆண்டு முதல் 1951ஆம் ஆண்டுவரை, அமைதியாகப் பணி புரிந்தேன்.

அப்போது வெளியுலகில் அமைதி இருந்ததா? இல்லை! அந்த ஆண்டுகளில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதிலே ஒன்று, சுதேச மன்னர்கள் ஆண்டு வந்த அய்ந்நூற்றுச் சில்லறை இந்திய இராச்சியங்களை மக்கள் இந்தியாவோடு இணைத்த மிகப்பெரும் சாதனையாகும்.

நம்ப முடியாத அந்தச் சாதனையைச் செய்தவர், அன்றைய இந்திய அரசின் உள்துறை அமைச்சர், மாண்புமிகு வல்லபாய் படேல் ஆவார். அந்த எஃகு மனிதர் வெற்றிகரமாக மேற்கொண்ட நடவடிக்கை நம் இந்திய வரலாற்றில் முன்னர் எப்போதும் கண்டிராத முழு இந்தியாவை நமக்குத் தந்தது.

இப்படி நேர்ந்திராவிட்டால், நூற்றுக்கணக்கான இந்திய இராச்சியங்கள் நீடித்திருந்தால், எங்காவது ஒரு பக்கம், அயல்நாட்டில் ஒன்று காலூன்றிப் புதிய காலனி ஆதிக்கத்திற்குக் கடைக்கால் அமைத்து இருக்கக்கூடும்.

இணைந்த இந்தியாவை இப்படியே முழுமையாகக் காத்துக் கொள்ளும் விவேகம் குடிமக்களிடம் தழைத்து ஓங்க வேண்டும்.

ஆளும் வாய்ப்புடையோரும் ஆள ஆசைப்படுவோரும் எல்லாப் பிரிவினரையும் ஒற்றுமைப்படுத்த வேண்டிய தொலைநோக்கோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/307&oldid=623225" இலிருந்து மீள்விக்கப்பட்டது