பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* b ரவடிவேலு 295

சிலர் ஆங்கிலப் பற்றாளர் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் _திகப்படியாக ஆங்கிலம் கற்கலாம்.

தமிழ்ப் பற்றுள்ள மாணவர்கள் தமிழை அதிகப்படியாகப்

படிக்கலாம்.

அறிவியல் நாட்டமுடையோருக்கு, இந்தி நேரத்தை அறிவியலுக்குச் செலவிட உரிமை உண்டு.

பள்ளியின் தலைமையாசிரியர் அவற்றுக்கு ஏற்பாடு செய்ய பவண்டும்.

நெளிவு சுளிவுக்கு இடம் கொடுத்த இம்முறை பத்தாண்டுகள் போல் எதிர்ப்பின்றி நடைமுறையில் இருந்தது.

தொலைநோக்கு உடையோர் இந்தி படித்தார்கள்.

தேர்வுக்கு இவ்வளவு மதிப்பெண் பெறவேண்டுமென்று விதிக்கப் படாமையால், இந்தி கற்பது பற்றி இருந்த அச்சம் மெல்ல அகலத் தொடங்கிற்று.

அதற்குக் கேடு வந்ததைப் பற்றிப் பின்னர் உரிய இடத்தில் கூறுவேன்.

நாட்டு நடப்பை இதோடு விட்டுவிட்டு என் வரலாற்றிற்கு வருகிறேன்.

சாமு நாயரைச் சந்தித்தேன்

மதுரை மண்டலப் பள்ளி ஆய்வாளரான திரு. சாமுநாயர் சென்னைக்கு வரும்போதெல்லாம் தகவல் கொடுப்பார்.

நான் அவரைக் கண்டு வருவேன். ஒரு முறை அப்படிக் கண்டபோது,

“என்ன தலைநகரில், இயக்குநருக்கு அருகில் இருந்தும் நீ அவரைக் கண்டு பல திங்கள் ஆயிற்றாமே; விரைவில் அவரைப் போய்ப் பார்’ என்றார்.

இயக்குநர் சொன்ன நல்ல செய்தி

அடுத்த நாள் காலை, பொதுக்கல்வி இயக்குநர், திரு. சதாசிவ ரெட்டியைக் கண்டேன்.

அதுவரை சென்று பாராததற்காக, அவரிடம் மன்னிப்புக் கோரினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/311&oldid=623230" இலிருந்து மீள்விக்கப்பட்டது