பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரு. து. சுந்தரவடிவேலு 297

‘அப்படி ஆணையிட இசைவதானால் உன் இசைவைக் கேட்பதாகக் கூறினேன்.

‘அமைச்சர், செயலர்களைக் கலந்துகொண்டு, இசைவைத் தெரிவித்தார்.

‘இதைப்பற்றி மாநகராட்சி ஆணையரிடம் இதுவரை சொல்ல வில்லை. அவரிடம் சொல்லி, மாநகராட்சி யின் ஆட்சேபணை இாாதென்றால், உன்னை உயர் பதவியில் அங்கேயே விட்டு வைக்கிறேன். ‘

இப்படிக் கூறினார் சதாசிவ ரெட்டி. ‘உங்கள் இருவரையும் நம்பி, என் எதிர்காலத்தை உங்கள் கைகளில் ஒப்படைத்து விடுகிறேன்’ என்றேன்.

பொதுக்கல்வி இயக்குநருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. திரு. சதாசிவ ரெட்டி, மேற்படி திட்டத்தைச் சென்னை நகரசபை ஆணையர் நரசிம்மமிடம் கூறினார்.

அவர் ரெட்டியைவிட விழிப்பாகச் செயல்பட்டார். அப்போது, கல்வி, உள்ளாட்சித் துறை, மக்கள் உடல்நலம் ஆகிய மூன்று துறைகளுக்கும் ஒரே செயலர்.

அன்று, திரு. ஆர்.டி. பால் என்பவர் அப் பதவியில் இருந்தார். ஆணையர் அவரிடம் சென்றார். என் விவகாரம் பற்றிப் பேசினார். மாநகராட்சி கல்வி அலுவலர் பணியை, நான் அங்கு இருக்கும்வரை, மண்டல ஆய்வாளர் பதவிக்கு நிகராகக் கருத இசைவதாக, செயலரிடம் வாக்குறுதி பெற்றார். *

அதற்கான விதி பற்றியும் இருவரும் ஒருமித்த முடிவுக்கு வந்தார்கள்.

இருந்த இடத்திலேயே பதவி உயர்வு

சில நாள்களில் எதிர்பார்த்த பதவி உயர்வு ஆணை வந்தது.

இடம் பெயராமலேயே பதவி உயர்வு கிடைத்தது பற்றி மகிழ்ச்சி அடைந்தேன்.

மேற்படி ஆணை வந்ததும் ஆணையர் அதை மாநகராட்சிக் கூட்டத்தில் வைத்தார்.

மன்றம், நான் அங்குத் தொடர்ந்து பணியில் இருப்பதைப்பற்றி மகிழ்ச்சியைத் தெரிவித்தது.

பிறகு, ஆணையர் செயலருக்கு ஒரு நேர்முகக் கடிதம் எழுதினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/313&oldid=623232" இலிருந்து மீள்விக்கப்பட்டது