பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29B நினைவு அலைகள்

பதவி உயர்வுக்கு ஆணையிட்ட நாளில் இருந்து என் மாநகராட்சிப் பணிக்காலத்தை உயர் பதவியின் பிரபேசன்’ காலத்திற்குக் கணக்கில் கொள்ளும்படி, அவரே எழுதினார்; அதற்கு ஆதரவான விதி முறையைச் சுட்டிக் காட்டினார்.

ஒரு திங்களுக்குப்பின் ஆணையர் எழுத்து மூலம் செயலரை நினைவுபடுத்தினார்.

ஆலோசனையில் இருக்கிறது. விரைவில் முடிவு வரும்’ என்று இரண்டு மூன்று முறை பதில் கிடைத்தது.

ஏமாற்றப்பட்டோம்

கிட்டத்தட்ட, நான்கு திங்களுக்குப்பின் ஆணை வந்தது. என்ன ஆணை?

ஆணையரின் பரிந்துரையை எற்றுக்கொள்ள இயலாது என்பது

ஆனை.

அரசன் நடத்தும் ஆட்சியில் விருப்பு வெறுப்பு விளையாடும், பொய் விளையாடுமா என்று தெரியாது!

மக்கள் ஆட்சியில் மிக உயர்ந்த இடத்தில், கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் போகும் என்பதை அப்போதுதான், முதன் முறையாக நான் உணர்ந்தேன்.

ஆணையர், ஆணையைக் கண்டு ஆத்திரங் கொண்டார்.

திரு. சதாசிவ ரெட்டியாரோடு உடனே தொடர்புகொண்டார். விளைவு?

இருவரும் அவ் வாணைக்கு எதிராகத் தனித்தனியே அரசுக்கு எழுதினார்கள்.

என்னை முதுகில் குத்தியது ஆணை. அப்போது மாநகராட்சியின் மேயர் திரு. இராமநாதன் செட்டியார் ஆவார்.

ஆணையர், அரசுக்கு எழுதும் கடிதங்களை மேயருக்குக் காட்டிவிட்டு அனுப்புவதே மரபு. மேயர், உரிய கடிதத்தைக் கண்டு சினங்கொண்டார்.

அந்த அநீதியை முதலமைச்சர் குமாரசாமி ராஜாவின் நேரடி கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினார்.

அவரிடம் நேரில் சொல்லிவிட்டு, தாமும் எழுதுவதாகக் கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/314&oldid=623233" இலிருந்து மீள்விக்கப்பட்டது