பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. திருவள்ளுவன் பிறந்தான்

தம்பி நடராசனின் திருமணம்

மாநகராட்சிப் பணியிலிருந்து விலகி, பொதுக்கல்வி இயக்ககத்தில் துணை இயக்குநராகச் சேர்ந்தேன்.

அந்த வரலாற்றைத் தொடர்வதற்கு முன்பு, முன்னரே நடந்த சில நிகழ்ச்சிகளைச் சொல்லவேண்டும்.

என் இரண்டாவது தம்பி, நெ.து. நடராசனுக்கும் பேரளம் மகாதேவர் மூன்றாவது மகள் செல்வி திலகத்திற்கும் பேரளத்தில் திருமணம் நடந்தது.

மீ. பக்தவத்சலனாரின் மைத்துனரான, திரு. தி.கோ. பாலசுப்ர மணியம், மகாதேவருக்கு நெருங்கிய உறவினர், அவர் இத்திருமணம் பற்றி என்னிடம் கூறினார்.

நான், அண்ணன் சா. குருசாமியிடம் கூறினேன். அவர் பல்லாண்டு களாக மகாதேவருக்கு வேண்டியவர்; இருவரும் ஒரே இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.

எனவே, அண்ணன் குருசாமி அந்த யோசனையை ஆதரித்தார். அப்புறம் இப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறதென்று என் தந்தைக்குச் சொல்லி அனுப்பினேன்.

அவருடைய இசைவு பெற்று, குஞ்சிதம், குருசாமி, நான் ஆகிய மூவரும் பெண் பார்க்கச் சென்றோம். அதன்பின், தந்தைக்குத் தகவல் கொடுத்தேன்.

அவர் ஒப்புதலோடு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. 12-7-48 அன்று காலை பேரளத்தில் திருமணம் நடந்தது.

முன்னாள் அமைச்சர் திரு. எஸ். முத்தையா அவர்கள் தலைமை யேற்று நடத்திக் கொடுத்தார்.

உடல் நலமின்மையால் என் மனைவி, பேரளம் வரஇயலவில்லை. என்னுடன் திரு. குருசாமியும் திருமதி குஞ்சிதமும் வந்து, உதவி புரிந்தார்கள்.

ஊரிலிருந்து என் தந்தையுடன் என் மாமாவும் சித்தப்பாக்கள் சிலரும் வந்து கலந்து கொண்டனர்.

தம்பி நடராசன் பொறியியல் பட்டதாரி; இரண்டாம் உலகப்போரின்

போது படிப்பை முடித்ததால், உடனே தற்காலிக வேலை கிடைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/316&oldid=623235" இலிருந்து மீள்விக்கப்பட்டது