பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ து. சுந்தரவடிவேலு 307

அன்று அலுவலகம் சென்றதும் சத்தியமூர்த்தியோடு தொலை பெ யில் தொடர்பு கொண்டேன்; இதமாக என் முடிவைச் சொன்னேன். அதைச் சொல்லுவதற்கு முன் அவருடைய அசாத்தியமான திறமையைப் பாராட்டினேன்.

எனக்கு வேண்டியவர் மீ. பக்தவத்சலம் என்று தெரிந்து வைத்து இருந்ததையும், என்னைவிடச் சுறுசுறுப்பாக இயங்கியதையும் பாராட்டினேன்.

அவருக்கு நிறைவு இல்லை. ‘மேலும் சில நாள்கள் சிந்தித்து முடிவு சொல்லும்படி’ ஆலோசனை கூறினார்.

மரியாதைக்காக “ஆகட்டும்’ என்றேன். முடிவை மாற்றிக் கொள்ள வில்லை.

‘உன்னை விற்காதே’ என்றார் புரட்சிக்கவி, பாரதிதாசன். தன்னை விற்பதைவிடப் பெரிதும் வெறுக்கத்தக்கது, தனக்குக் கிட்டிய பெரும்பதவியை விற்பது.

வலிய வந்த வாய்பைக் கோட்டை விட்டவன் என்று இப்போதே பிரிக்காதீர்கள். மீண்டும் மீண்டும் சிரிக்க இன்னும் பல வாய்ப்புகள் வரும்.

நான் வீட்டிலிருந்ததைக் கோட்டை விட்டதைச் சொல்லட்டுமா?

1919ஆம் ஆண்டின் பிற்பகுதி, கருவுற்றிருந்த என் மனைவி காந்தம்மா எங்கள் வீட்டிற்கு நான்கு வீடுகளுக்கு அப்பாற் குடியிருந்த, தாயார் வீட்டில் தங்கியிருந்தார்.

என் வீட்டில், நான் மட்டும் தனியே இருந்தேன், எப்போதும்போல், சாப்பாடு மாமியார் வீட்டில்.

பதக்கம் களவு போயிற்று

ஒர் இரவு; வீட்டின் முன் அறையில் உறங்கிக் கொண்டிருந்தேன். பொழுது விடிந்தபிறகு, என் கடைநிலை ஊழியர் வழக்கம்போல் வந்தார்.

வீடு மூடிக்கிடந்ததைக் கண்டார். சாளரத்தின் பக்கம் நின்று கூப்பிட்டார்.

பலமுறை கூப்பிட்ட பிறகு விழித்துக் கொண்டேன். எழுந்து போய்க் கதவைத் திறந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/323&oldid=623243" இலிருந்து மீள்விக்கப்பட்டது