பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரு து சுந்தாவடி வேலு 309

என்ன பெயர் இடுவது. பல பெயர்கள் அடிபட்டன. திருவள்ளுவர் என்று முடிவு செய்தோம்.

திருமணத்திற்கு அழைத்ததைவிட அநேகரை அழைத்துத் தேனிர் விருந்து அளித்து அப் பெயரைச் சூட்டினோம்.

பேச்சுப் பாணியில் மாற்றம்

டாக்டர் செரியன், மேயராக இருந்தபோது, என் பேச்சுகளைப் பல முறை கேட்டிருக்கிறார்; இரண்டு முறை கேட்டபின், பேச்சைப் பத்து மணித் துளிகளில் முடித்துக் கொண்டால் பிரமாதமாக இருக்கும்’ என்றார்.

அப்புறம் அவர் பதவிக் காலத்தில், விழாக்களில், பத்து மணித்துளிகளுக்குமேல் பேசுவதில்லை.

துணைமேயர் திரு. இராசாபாதர் முதல் கூட்டத்திலேயே என்னைப் புகழ்ந்து பேசினார். அவர் கிட்டத்தட்ட என் வயதினர், எனவே, அவரிடம் சிறிது உரிமை கொண்டாடினேன்.

‘அய்யா இப்படிப் பலரும் கூறுகின்றார்கள். மேலும் சிறப்பாக அமைய எவரும் வழி சொல்லவில்லை’ என்றேன்.

அவர் வழி சொல்ல முன் வந்தார்.

‘பேச்சு முழுவதும் ஒரே உரத்த குரலில் பேசுவதற்குப் பதில், சில இடங்களில் உரத்தும் சில இடங்களில் மென்மையாகவும் பேசினால் நன்றாயிருக்கும் என்றார் அதைப் பின்பற்றினேன். அவரும் கேட்டு மகிழ்ந்தார்.

40. பாரிசுக்குப் போகிறாயா?

பகல் உணவுத்திட்ட வெள்ளோட்டம்

சென்னை மாநகரில் சைதாப்பேட்டையை ஒட்டி, சாபர்கான் பேட்டை என்று ஏழைகள் வாழும் ஒரு பகுதி இருக்கிறது.

அப் பகுதியில் 1950 இன் தொடக்கத்தில் தொடக்கப்பள்ளி இல்லை. அதேபோல், தியாகராய நகர் பகுதியிலுள்ள கண்ணம்மா பேட்டையிலும் தொடக்கப்பள்ளி இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/325&oldid=623245" இலிருந்து மீள்விக்கப்பட்டது