பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 O நினைவு அலைகள்

இரு பகுதிகளிலும் முதலில் மூன்றாவது வகுப்புகள் கொண்ட பள்ளிகள் திறக்க, மாநகராட்சியின் ஆணை பெற்றேன். கல்வித் துறையின் ஒப்புதல் பெற்றேன்.

இரு பள்ளிகளுக்கும் சிறப்பான திறப்பு விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

அத்தொகுதி மாநகர மன்ற உறுப்பினராக திரு.கே.எம். சுப்ரமணியம் முன்நின்று ஏற்பாடுகளைச் செய்தார்.

சாபர்கான் பேட்டை விழாவிற்கு முன், பலமான சிற்றுண்டி விருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். செலவு, அந்தப் பேட்டையில் வாழ் வோருடையது.

அவர்களில் பெரும்பாலோர், அரசு அலுவலகங்களில் அடிப்படை ஊழியர்கள். அவர்கள், சிற்றுண்டிக்கு மட்டும் நூறு ரூபாய்க்குமேல் செலவு செய்தனர்.

தன் கையே தனக்குதவி

அவ்வளவு செலவு செய்துவிட்டு, அப் பள்ளிகளில் சேருவோர் ஏழைகள் ஆனதால், மாநகராட்சி பகல் உணவுத் திட்டத்தை அப் பள்ளிக்கும் ஏற்பாடு செய்யும் படி என்னை ஊரறிய வேண்டிக் கொண்டார்கள்.

ஆகட்டு மென்று சொல்ல, மாநகர் ஆட்சிக்கே உரிமை உண்டு: முடியாது என்று சொல்ல முடியவில்லை.

எனது உரையில் ‘இன்று பண்டிகை நாள்; எல்லோரும் வீடுகளில் விருந்து உண்டிருக்கிறோம். சிற்றுண்டி மிகை.

‘அதற்குச் செலவிட்ட நூறு ரூபாய்களை மிச்சப்படுத்தியிருந்தால், அதைக் கொண்டே, ஆண்டு முழுவதற்கும் அய்ந்து பேர்களுக்கு நீங்களே உணவு அளித்திருக்க முடியும். -

‘உங்கள் தொகுதி உறுப்பினர் உதவியை நாடியிருந்தால், அவரும் அவரது நண்பர்களுமாகச் சேர்ந்து பதினைந்து பேர்களின் செலவைமுந்நூறு ரூபாய்களை ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.

‘உங்களுக்கு நீங்களே உதவி செய்து கொள்ள முன் வந்தால், மாநகராட்சி சும்மா இருக்க முடியாது. அது முன்வந்து பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்.

‘உங்கள் முன் கை நீளட்டும்; பெரிய நன்கொடைகள் வேண்டாம்; குறைந்தது கால் ரூபாயாகிலும் கூட்டத்திலேயே கொடுத்து விடுங்கள்’ என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/326&oldid=623246" இலிருந்து மீள்விக்கப்பட்டது