பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நினைவு அலைகள்

மக்கள் முயற்சியால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதை என்னைவிட நன்றாகப் புரிந்து கொண்டிருந்த கர்மவிரர் காமராசர், அப்போது முதல் அமைச்சராக விளங்கினார்.

அவர் என்னை முடுக்கிவிட்டார். அது பற்றி விவரங்களை அதற்கு உரிய இடத்தில் காண்போம்.

நான் மாநகராட்சியில் இருக்கையில் சென்னை வண்ணாரப் பேட்டையில் மாநகர் மன்ற உயர்தொடக்கப் பள்ளிக்குப் பெரிய புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. s

ஓமந்துரார் நிறைவு பெற்றார்

அதை முதலமைச்சர், ஓமந்துார் பி. இராமசாமி திறந்து வைத்தார். அவ் விழாவின்போது, அப் பெரியவரோடு முதன் முறையாகக்

கலந்துரையாடும் வாய்ப்பு கிட்டியது.

கல்வி பற்றிய பல புள்ளி விவரங்களைத் துருவித்துருவிக் கேட்டார். அவருக்கு நிறைவு ஏற்படும் வகையில் பதில் உரைக்க முடிந்தது.

தொடக்கக் கல்வி வளர்க்க ஒரு கோடி

இப்போது பொதுக்கல்வி இயக்ககப் பணி பக்கம் வாருங்கள்.

அரசு ஆணைகள், கடிதங்கள் ஆகியவற்றை உடைத்ததும் ஒரு கோப்பில் கட்டி, இயக்குநர், துணை இயக்குநர்கள் வேறு அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் ஆகியோருக்கு நாள்தோறும் அனுப்பி வைத்தார்கள்.

அநேகர், தங்கள் பிரிவைச்சார்ந்தவற்றை மட்டுமே கவனிப்பார்கள்.

நானோ, எல்லாப் பிரிவுகளுக்கும் உரியனவற்றைக் கவனமாகப் படிப்பேன்.

ஏன் அப்படி?

இன்றைக்கு ஒரு பிரிவின் பொறுப்பில் இருப்பவர், நாளைக்கு வேறொரு பிரிவின் துணை இயக்குநர் ஆகலாம். வாய்த்த போதெல்லாம் எல்லாக் கடிதங்களையும் படித்து, அரசின் அணுகு முறையைத் தெரிந்து கொள்வது, எப்போதோ ஒரு போது, செயல் திறனுக்கு உதவும்.

இப்போக்கு, நான் திட்டமிடாமலே என் மதிப்பை உயர்த்திவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/328&oldid=623248" இலிருந்து மீள்விக்கப்பட்டது