பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ைது சுந்தரவ டிவேலு 3.13

ஒருநாள் தொடக்கக்கல்வி பற்றி கல்விச் செயலரிடமிருந்து மயக்குநர் திரு. டி. சதாசிவ ரெட்டியாருக்கு ஒரு நேர்முகக் கடிதம் வlதது.

அது. உடனே, அதில் கண்டதுபற்றிப் பதில் அனுப்பக்கோரிற்று. அவ்வேளை, தொடக்கக்கல்வி துணை இயக்குநர் திரு. பத்மநாப

பெட்டியார் ஒரு விடுப்பில் சென்றிருந்தார். திரும்பி வர ஒரு வாாத்துக்குமேல் பிடிக்கும் என்பது தெரிந்தது.

இயக்குநர் அதுவரை காத்திருக்க விரும்பவில்லை. அக் கடிதத்தை என்னிடம் காட்டினார்.

அது பற்றிய கோப்பைப் பார்த்துப் பதில் எழுதிக் கொண்டுவர வெண்டினார்.

உரிய கோப்பைப் பார்த்தேன்.

செய்தி என்ன?

இந்திய அரசு, ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாகவும் அதைக் கொண்டு தொடக்கக்கல்வி வளர்ச்சிக்குத் திட்டம் தீட்டி அனுப்பும்படியும் சென்னை மாகாண அரசுக்கு எழுதியது.

அக் கடிதம் இயக்குநருக்கு அனுப்பப்பட்டது.

தொடக்கக்கல்வி துணை இயக்குநரே, இயக்குநரிடமும் காட்டாது பதில் எழுதிவிட்டார். என்ன பதில்?

ஏற்கெனவே, பல ஊர்களில் கட்டாய இலவசக் கல்வியை நடை முறைக்குக் கொண்டு வந்தோம்.

அச்சுமையைத் தாங்க முடியவில்லை.

அவ்வூர்களில் தற்காலிக ஆசிரியர்களை அனுப்ப வேண்டிய நிலை இருக்கிறது.

இந்த ஒரு கோடியைக் கொண்டு அதைத் தடுப்போம்.

உள்ள ஆசிரியர்களை வேலையில் நீடிப்போம். இது திட்டம்.

அதற்காக, ஊர்களின் பெயர்களையும் ஆசிரியர்களின் எண்ணிக் கையையும் உடன் அனுப்பினார்கள்.

வளர்ச்சித் திட்டம் கேட்டால், மாற்றுக் கணக்கு எழுதும் திட்டத்தை அனுப்பினார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், மாகாண அரசு அதை இந்திய அரசுக்கு அனுப்பிவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/329&oldid=623249" இலிருந்து மீள்விக்கப்பட்டது