பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.14 நினைவு அலைகள்

தில்லி, அதை ஏற்கவில்லை. வேறு வளர்ச்சித் திட்டம் கேட்டது. அதை ஆயத்தம் பண்ணுவதில் கால தாமதம் ஏற்பட்டது. அதனால் இயக்குநருக்கு நேர்முகக் கடிதம் வந்தது. இந்த விவகாரத்தைக் கோவையாக இயக்குநரிடம் கூறினேன்.

எந்த வளர்ச்சித் திட்டத்திற்கு அந்த ஒரு கோடியைச் செலவு செய்யலாம் என்று இயக்குநர் கேட்டார்.

என் யோசனை

பள்ளியில்லாத ஊர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவை அனைத்திலும் பள்ளிகள் திறப்பது, வளர்ச்சித் திட்டத்தில் முக்கிய இடம்பெற வேண்டும்.

அதற்கு ஒரு கோடி போதாது; பல கோடி தேவை. அதைச் சொல்லி. உடனடியாக, பள்ளிக் கட்டடத்தை இலவசமாகக் கொடுக்கும் ஊர்களில் பள்ளிகள் தொடங்குவோம்; மிச்சம் இருந்தால், அய்ந்தாண்டுக்கு இலவசக் கட்டடம் கொடுக்கும் ஊர்களில் திறப்போம், என்று திட்டமிடலாம் என்றேன்.

அப்படியே ஆயத்தம் செய் என்றார். இருபத்து நான்கு மணிகளுக்குள் விவரமான திட்டத்தை இயக்கு நரிடம் கொடுத்தேன் படித்து மகிழ்ந்தார்; அரசுக்கு அனுப்பினார்.

அங்கிருந்து தில்லிக்குச் சென்றது. தில்லி ஒப்புதல் அளித்தது. சென்னை பவழக்காரத் தெருவில் ஏ.ஆர்.சி. உயர்நிலைப் பள்ளி ஒன்று நடக்கிறது.

பவழக்காரத் தெருவிலோ, அக்கம் பக்கத்திலோ, அய்ந்து ஏக்கர் விளையாட்டுத் திடலுக்கு எங்கே போவது?

அது இல்லாமையால் அப் பள்ளியின் அங்கீகாரம் ஆண்டுக்கு ஆண்டு நீடிக்கப்படும்.

பவழக்காரத் தெருவில் காலி இடம் ஏது?

1951ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மதுரை மண்டல ஆய்வாளர் பல ஆண்டுகளாகியும் விளையாட்டுத் திடல் ஏற்பாடு செய்யாத அப் பள்ளிக்கு மேற்கொண்டு ஒப்புதல் கொடுக்க வேண்டாம் என்று எழுதிவிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/330&oldid=623251" இலிருந்து மீள்விக்கப்பட்டது