பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"In P! *" வேலு 315

உயர்நிலைப் பள்ளி பற்றியதாகையால், அது என் ஆணைக்கு வந்தது. ஆய்வாளர் பரிந்துரையை ஏற்பதாயின் நானே முடிவு செய்திருக்கலாம்.

மதுரை ஆய்வாளர் திரு. சாமு நாயர் இடம் மதிப்புக் கொண்டவன். இருப்பினும் எத்தனை கோடி கொடுத்தாலும் பவழக்காரத் தெருவில் அய்ந்து ஏக்கர் திறந்த வெளி கிடைக்காதென்பது எனக்குத்தானே நன்றாகத் தெரியும்.

மண்ணில் இல்லாததைக் கேட்டு, அப்பகுதியினர் கல்வியில் மண் அள்ளிப் போடலாமா?

பொதுநலன் பற்றிய கேள்வி எழும்போது, நாம் பலருக்கு மாறாகப் பெசுகிறோம்? எதற்கு மாறாகப் பேசுகிறோம்!

அது எனக்குத் தீமையை விளைவிக்கும் என்று சிந்திக்கத் தெரியாதவன்.

எனவே, ஆய்வாளர் பரிந்துரைக்கு மாறாக எழுதி அனுப்பினேன். சில கிலோ மீட்டர் துாரம் வரை திடல் இல்லாத நிலையில் வேறு இடத்தில் வேறு ஒருவரைக் கொண்டு மாற்றுப்பள்ளி திறக்க இயலாது. இருக்கிற கல்வி வாய்ப்பையும் கெடுக்க ஆணையிடுவது சரியல்ல. விளையாட்டுத் திடல் இல்லாமையைப் பொருட்படுத்தாது, தொடர்ந்து நடத்த இசையலாம், என்றேன்.

இயக்குநர் முடிவு சொல்லவில்லை. நேரில் பேசும்படி ஆணை யிட்டார்.

பேசச் சென்றதும் ‘நீ சொல்வது முழுவதும் சரி. தங்கள் பரிந்துரையைப் பொருட்படுத்தவில்லை என்று கல்வி அலுவலர் களுக்குச் சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது.

‘எனவே, நீ நேரில் பார்த்துவிட்டு அறிக்கை கொடுக்கும் படி ஆணையிடப் போகிறேன். அதன் பேரில், ஒப்புதல் அளிக்கிறேன்’ என்றார்.

அதன்படி நானே தணிக்கை செய்தேன். அக்கம்பக்கத்தில் திறந்த வெளி இல்லாமையை அப்பொழுதுதான் தெரிந்து கொண்டது போல் எழுதினேன்.

அதன் அடிப்படையில் பள்ளியை நடத்த ஒப்புதல் அளிக்கலாமென்று பரிந்துரைத்தேன்.

இயக்குநர் சதாசிவ ரெட்டி அதை ஏற்றுக் கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/331&oldid=623252" இலிருந்து மீள்விக்கப்பட்டது