பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 நினைவு அலைகள்

ஆணையில் என் நேர்முகத் தணிக்கையைப் பீடிகையாகக் குறிப்பிட்டார்.

இப் பள்ளி இன்றும் இயங்குகிறது; கல்வியை வளர்க்கிறது.

அதே போன்று, சூளை இந்து ஒற்றுமைக் கழக உயர்நிலைப் பள்ளிக்கு ஆண்டுக்கு ஆண்டு ஒப்புதல் தந்தார்கள்.

1951 இல் அதை முறித்துவிடப் பரிந்துரை வந்தது.

பழைய உத்தியை இயக்குநர் கையாண்டார்.

சேரவேண்டிய பணத்தை உடனே கொடுப்பீர்

தொழிலாளர்கள் நிறைந்த பின் தங்கிய பகுதியில் கல்விப் பணி ஆற்றிக் கொண்டிருக்கிறது. அரசு அலுவலர்கள் பலருக்கு எப்படியோ எளிதில் ஆணவப்போக்கு வந்து விடுகிறது.

மாவட்டக் கல்வி அலுவலராகவே நேராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், துன்பப்பட்டு மெல்ல மெல்ல வளர்ந்தவர்களைவிட தாராளமாகவும் பணிவோடும் இருக்க வேண்டும். வெளிமாவட்ட மொன்றில் கல்வி அலுவலராக இருந்த ஒருவரிடம் தலையிடும்படி மாவட்டக் கழகத் தலைவர் ஒருவர். அலுவல் பற்றி என்னிடம் வேண்டினார்.

அவர் ஏதாவது சலுகை கேட்டாரா? இல்லை; உதவி கேட்டாரா? இல்லை.

மாவட்ட ஆட்சிக்குழுவிற்கு அவ்வப்போது சேரவேண்டிய உயர்நிலைப் பள்ளி மானியத் தொகைகளில் பாதியை முன்பணமாகக் கொடுக்க வேண்டும் என்பது விதி.

ஆண்டின் இறுதிக்குப்பின், தக்கவரால் தணிக்கை செய்யப்பட்ட கணக்கு வந்ததும் மீதியைக் கொடுக்க வேண்டும்.

குறிப்பிட்ட மாவட்ட அலுவலர் அப்படிக் கொடுப்பதில், அதிகமாகக் காலதாமதம் செய்துவிட்டார்.

ஆட்சிக்குழுத் தலைவர் அவரை நேரில் பார்த்துக் கேட்டும் பலன் இல்லை.

ஆசிரியருக்குச் சேரவேண்டிய சம்பளம் நான்கைந்து திங்களாகி விட்டது.

ஆசிரியர்களின் அவலக் குரல் செய்தித் தாள்களில் வெளியாயின. பிறிதின் நோய் தன்னோயெனக் கருதிய தலைவர், எனக்கு நேர்முகக் கடிதம் எழுதினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/332&oldid=623253" இலிருந்து மீள்விக்கப்பட்டது