பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நினைவு அலைகள்

‘சரி நீ இந்த வண்டிக்கு வருகிறாய் என்று, நானே சி.சு.வுக்குத் தந்தி கொடுத்துவிடுகிறேன்; சில நாள் தங்குவாயென்றும் அறிவித்து விடுகிறேன்.

‘அவர் புகைவண்டி நிலையத்திற்கு வராவிட்டாலும் நீயே, வண்டி வைத்துக்கொண்டு, அவர் பங்களாவிற்குச் செல். கலெக்டர் அலுவலகம் தாண்டி, வலது பக்கம் திரும்பினால், அவருடைய பங்களா இருக்கிறது.

‘சி.சு. புகழ்பெற்ற வழக்கறிஞராக இருக்கிறார். ரிக் ஷாக்காரர்களுக்கு அவர் பங்களா தெரியும். அங்குப் போய்ச் சேர்வதில் ஒரு தொல்லையும் இராது ‘ என்று அய்யாசாமி ஊக்கப்படுத்தினார்.

அதோடு நிற்கவில்லை; சி.சு.வுக்குத் தந்தியும் கொடுத்தார். அடுத்தநாள் இரவு நீலகிரி விரைவு வண்டியில் சென்னையிலிருந்து கோவைக்குப் புறப்பட்டுச் சென்றேன். மறுநாள் பொழுது விடிய, கோவை அடைந்தேன்.

அய்யாசாமி கூறியபடி, வழக்கறிஞர் சி. சுப்பிரமணியம் பங்களா, எல்லாருக்கும் தெரிந்திருந்தது.

அங்குப் போய்ச் சேர்ந்தேன். அவர் என்னை ஆர்வத்தோடு வரவேற்றார். எனக்காக, ஒதுக்கியிருந்த தனி அறையைக் காட்டினார்.

‘'எது வேண்டுமானாலும் கூச்சப்படாமல் சமையல்காரனிடம் சொல்லலாம்.

‘உன் வீட்டில் இருப்பதுபோலவே சுதந்தரமாக இருக்க வேண்டும். ‘அவசரப்பட்டு, கண்ட இடத்தில் வீடு பிடிக்க வேண்டாம்’ என்று சி. சுப்பிரமணியம் கூறினார்.

எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. காலைக் கடன்களை முடித்தேன். சி.சு.வோடு சிற்றுண்டி உண்டேன்; சிறிது நேரம் உரையாடினேன்.

அலுவலக நேரத்திற்கு வெகு முன்னதாகவே, மாவட்டக் கல்வி அலுவலர், வீடு தேடிச் சென்றேன்.

குலாம் தஸ்தகீரின் பேருள்ளம்

திரு. குலாம்த ஸ்தூர், அன்போடு வரவேற்றார். ஆர்வத்தோடு பாட்டினார்: பெங்கும் உவகையோடு வாழ்த்தினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/34&oldid=623261" இலிருந்து மீள்விக்கப்பட்டது