பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 நினைவு அலைகள்

காந்தம்மாவின் பயனச் செலவிற்கான நாலாயிரம் ரூபாய்களைத் தான் கடனாகத் தருவதாகக் குத்துசி குருசாமி யிடம் சொல்லி அனுப்பினார்.

பெரியாரிடம் கடன் வாங்க விரும்பவில்லை; பணிவாக மறுத்து விட்டேன்.

மனஞ்சேரி கந்தசாமி முதலியார் உதவி

என்னிடம் எந்த உதவியும் அதுவரை பெறாத மணஞ்சேரி கந்தசாமி முதலியார் வந்து என்னைக் கண்டு, அந்தச் செய்தி பற்றிய மகிழ்ச்சியைத் தெரிவித்தார். வேண்டிய உதவி செய்ய முன் வந்தார்.

என் காரை உடனே விற்றுத் தரும்படி கோரினேன்.

‘அவசரப்பட்டுக் குறைந்த விலைக்கு விற்க வேண்டாம். நீங்கள் இலண்டனுக்குப் புறப்பட்ட மறுநாள், நான் வந்து காரை ஒட்டிக் கொண்டு போகிறேன். வருவதற்குள் விற்று வைக்கிறேன்’ என்றார்.

பயனத்திற்கு வேண்டிய தொகையை முன் பணமாகவே கொண்டுவந்து கொடுத்தார்.

எங்களுக்குத் தெம்பு பிறந்தது.

என் மனைவியும் நானும் சென்றுவர ஏற்பாடுகள் செய்தோம்.

கொழும்பு சென்றேன்

சென்னையிலிருந்து விமானம் வழியாக கொழும்பு சென்று, அங்கே ஆஸ்திரேலியாவிலிருந்து இலண்டன் செல்லும் கப்பலேறுவதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டோம்.

துணை இயக்குநர் நிலையில் இருப்பவர்கள் அக் காலத்தில் கப்பலில் செல்வதற்கு மட்டுமே அரசு அனுமதித்தது.

கொழும்பில் இருந்து இலண்டனுக்குக் கப்பல் கட்டணம் எவ்வளவு?

இரு படுக்கையுள்ள தனி அறைக்கு நூற்றுப் பன்னி ரெண்டு பவுன்கள்; அப்போது பவுனுக்குப் பதின்மூன்றரை ரூபாய் மதிப்பு.

மேற்படி கட்டணத்தில், இருவேளை உணவு, காலைச் சிற்றுண்டி, மாலைத் தேiைர் இவ்வளவும் அடங்கும்.

கப்பலேறும் கொழும்பிற்கு, மூன்று நாள் முன்னர்ப் போக வேண்டியிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/340&oldid=623262" இலிருந்து மீள்விக்கப்பட்டது