பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. l சுந்த ( டி.வே லு. 325

அங்கே மதராஸ் பாளையகாட் கம்பெனியில் தங்குவதற்கு வாலாஜாபாத் வா.தி. மாசிலாமணி முதலியார் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

மதராஸ் பாளையகாட் நிறுவனத்தார், எங்கள் இருவரையும் தங்களோடு தங்க வைத்து, நகரைச் சுற்றிக் காட்டி, இமைபோல் காத்து, துறைமுகத்திற்கு அழைத்துப்போய், அன்புடன் வழி அனுப்பி வைத்தார்கள்.

பத்து நாள்களுக்கு வரக்கூடிய அளவு சீடை செய்து கொடுத்தனுப் பினார்கள்.

புக்கர் வாஷிங்டன் - இந்தியப் பதிப்பு அப்பா வா.தி. மாசிலாமணி முதலியார்

இவ்வளவும் வா. தி. மாசிலாமணி முதலியார்மேல் கொண்ட பற்றால் எங்களுக்குக் கிடைத்தது.

‘நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு, எல்லார்க்கும் பெய்யும் மழை அந்த நல்லார் வா. தி. மாசிலாமணி முதலியார் பற்றிச் சொல்ல வேண்டும்.

அவர் பயிற்சி பெற்ற ஆசிரியர்: வாலாஜாபாத்தில் எட்டு வகுப்புகள் கொண்ட இந்துமத பாடசாலையை நிறுவி நிர்வகித்து வந்தார்.

வள்ளல்ார் மாணவர் இல்லம் ஒன்றையும் தொடங்கி, தாய் தந்தையரை இழந்த நூற்றுக்கணக்கான சிறுவர்களுக்கு அப்பாவாக விளங்கி, கல்வி கற்பித்து, ஒழுக்க நெறியில் பழக்கி, ஆயிரக்கணக் கானவர்களை ஆளாக்கியவர்.

‘கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள், அக் கல்வி நிலையத்தையும் அதன் சிறந்த பணிகளையும் அங்கு நடைபெறும் கைத்திறப் பயிற்சிகளையும் அருமையான உடலோம்பலையும் நாள் முழுதும் கவனித்துப் பார்த்துவிட்டு,

‘பாலாற்றங் கரையிலே என்ற தலைப்பில் அருமையான கட்டுரை அண்றை விகடனில் எழுதிப் பாராட்டினார்.

அதன் பின்னர், அது பல சிந்தனையாளருக்குப் புனிதப் பயணத்தலமாக மாறிவிட்டது என்பது மிகையல்ல.

| நூற்றாண்டின் இருபதுகளிலிருந்து தமிழ்நாட்டுச் சமய குருமார்கள், அரசியல் தலைவர்கள், தமிழ்மொழி வல்லுநர்கள், சமூக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/341&oldid=623263" இலிருந்து மீள்விக்கப்பட்டது