பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 நினைவு அலைகள்

விரைந்து செயல்பட்ட பங்கீட்டு அலுவலகம்

பல அலுவலர்கள் காத்துக்கொண்டு இருந்தார்கள். நான் ஒருவரிடம் என் மனைவி வேறொருவரிடம் வந்து அலுவல் பார்க்கர் சொன்னார்கள். இரு அலுவலர்களும் பெண்கள்.

அப்படியே பிரிந்து நின்றோம். இமைக்கும் முன், அலுவலர் இருவரும் அச்சிட்ட மனு ப் பாரங்களைக் கையில் எடுத்துக் கொண்டார்கள்.

‘உங்கள் பெயர்களைப் பிழையின்றி எழுத உதவும் பொருட்டுப் பாஸ்போர்ட்டைக் கொடுங்கள்’ என்று நாசுக்காகக் கேட்டார்கள்: வாங்கினார்கள்.

அதில் இருந்த தகவல்களை எழுதிக் கொண்டார்கள்.

ஒர் இடத்தைக் காட்டி, அங்குக் கையெழுத்திடச் சொன்னார்கள்.

அப்படிச் செய்ததும் வெவ்வேறு வண்ணங்களில் அச்சிடப்பட்டு இருந்த இனிப்பு, சாக்லேட், பழம் வவுச்சர்களையும், சீனி, காப்பி அடையாளங்களையும் எங்களிடம் எண்ணிக்காட்டி, ஒர் உறையில் போட்டுக் கொடுத்தார்கள்.

‘நீங்கள் தாவர உணவுக்காரர்; ஆகையால், பழம், சாக்லேட் இனிப்பு, மற்றவர் பங்கீட்டைக் காட்டிலும் அதிகம். இவற்றை நீங்களே பயன்படுத்திக் கொள்ளலாம்.

‘ஆனால், காப்பி, சீனி ஆகியவற்றை வாங்கிக்கொள்ள, உங்களுக்குக் காப்பி கொடுக்கும் வீட்டுக்காரருக்கு உரிமை உண்டு ‘ என்று சொல்லியனுப்பினார்.

பங்கீட்டு அலுவலர்கள் எவ்வளவு நேரத்தில் எங்கள் வேலைகளை முடித்துக் கொடுத்தார்கள்? நான்கு மனித்துளிகளுக்குள் முடித்து விட்டார்கள்.

அக்கால கட்டத்தில், அந் நாட்டில் உழைக்கும் நிலையிலுள்ள எல்லா மக்களினுடைய மொத்த உழைப்பும் நாட்டின் புனரமைப்பிற்குத் தேவைப்பட்டது.

அப்படியிருக்க, நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான அலுவலர்கள், பாட்டாளிகள் முதலியோர் தவிர்க்க முடியாத பங் டேட்டுத் தொல்லைகளில் நேரத்தை வீணாக்க நேர்ந்துவிட்டால் அது நாட்டிற்.ே பேரிழப்பு ஆகும் என்பதை அரசும் மக்களும் நன். உணர்ந்திருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/348&oldid=623270" இலிருந்து மீள்விக்கப்பட்டது