பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 நினைவு அலைகள்

அவருடைய பதில் என்ன? ‘ஒவ்வோர் மனுவையும் கள ஆய்வர் நேரில் சென்று, விசாரித்து, பரிந்துரைத்த பிறகே, துணைப் பங்கீட்டு அலுவலர், பங்கீட்டு அட்டையில் கையெழுத்திடலாம்.

‘'நான் சொல்லுகிறேன் என்பதற்காக என் கீழ் வேலை செய்பவர், பரிந்துரை வருமுன்னே, பங்கீட்டுச் சீட்டைக் கொடுத்துவிட்டால், எவர் எவரைச் சந்தியில் இழுத்து வைப்பார்கள் என்று சொல்லமுடியாது.

‘'காலம், கீழ் நிலையில் அலுவல் பார்ப்போர் காலம். ‘நம் மேல் அழுக்காறு கொண்டிருப்பவர்கள் சிறியவர்களின் பொய்க் கூற்றைப் பெரிதுபடுத்தி, நம்மேல் சேற்றைப் பூச நினைக்கக்கூடும்.

‘பொறுத்தது பொறுத்தீர்கள்; இன்னும் இரண்டொரு நாள்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்’ என்று எனக்கு ஆறுதல் கூறினார்.

சில நாள்களில் கள ஆய்வாளர் வந்தார்; நான் இல்லாத நேரம் வந்தார். நாங்கள் திரும்பி வந்தது உண்மை என்று அறிக்கை அனுப்பினார்.

அடுத்த ஒரு வாரத்தில் பங்கீட்டுச் சீட்டைப் பெற்றேன்.

பிரிட்டிஷ் கவுன்சில்

மீண்டும் இலண்டனுக்குப் போனோம் அங்கே, பிரிட்டிஷ் கெளன்சில் அலுவலகத்திற்குச் சென்றோம்.

ஆர்வத்தோடு வரவேற்கப்பட்டோம். எங்களுக்காக விரிவான பயணத் திட்டம் போட்டுவைத்திருந்தார்கள்.

எங்கள் வசதிக்கேற்ப, ஆங்காங்கே மாற்றங்கள் செய்து உதவினார்கள்.

தொடர்பு கொள்ள வேண்டியவர்களோடு தொடர்பு கொண்டு நாங்கள் போகும் இடங்களில், தங்கும் ஒட்டல், பார்வையிடும் கல்வி நிலையங்கள் ஆகிய ஏற்பாடுகளை மிகச் செம்மையாகச் செய்து கொடுத்தார்கள்.

அந்த நான்கு திங்களுக்கு மேற்பட்ட பிரிட்டானியக் கல்விப் பயணத்தின்போது எங்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை.

புதிய ஊருக்குச் சென்று இறங்கினால், உரியவர் வந்து காத்திருப்பார்; உடனிருந்து உதவுவார்; அழைத்துப்போக வேண்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/350&oldid=623273" இலிருந்து மீள்விக்கப்பட்டது