பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 நினைவு அலைகள்

செய்துவரும் தொழில் பற்றியதாக இருக்கலாம். பொது அறிவு, இலக்கிய அறிவு, வரலாற்று அறிவு போன்ற சிந்தனையைப் படரவிடும் கூறாகவும் இருக்கலாம்.

பள்விப் படிப்பை முடித்துவிட்டு, வேலைகளில் சேருவோர் இரண்டு மூன்றாண்டு காலம் வரை வாரத்திற்கு ஒருநாள் அறிவு விரிவாக்கப் படிப்பிலும், ஒருநாள் தொழில் திறன் வளர்ச்சிக்கும் செலவிடுவதற்குப் பெரிய தொழிற்சாலைகள் வழிவகை செய்து தருதல் நல்லது.

இத்தகைய கருத்துகள் வெளியிடப்பட்டன. இந்தக் கருத்துகளைச் செயல்படுத்த எவ்வளவு செலவாகும்?

அந் நிதியை எங்கெங்கிருந்து திரட்டுவது என்பது பற்றிச் சிந்திக்கப் பட்டன.

மொத்தத்தில், பத்தாண்டுப் பள்ளிப்படிப்பு இக்கால மக்களுக்குப் போதாது. --

வாழ்நாள் முழுவதும் கற்பதற்கான வாய்ப்புகள் வெள்ளம் போல் பெருக வேண்டும் என்னும் கருத்து பிரிட்டனில் செல்வாக்குப் பெற்று இருந்ததை எங்களால் உணர முடிந்தது.

நாங்கள் ஆக்ஸ்போர்டில் தங்கியிருந்தபோது, கோடைகாலம். எங்கும் பசுமை; மாலைப் பொழுதில், மணிக் கணக்கில் ஆற்றங்கரையில் உலாவி மகிழ்ந்தோம்.

பாரிசுக்குச் சென்றோம்

ஆக்ஸ்போர்டிலிருந்து இலண்டன் திரும்பினோம். அங்கிருந்து

பாரிஸ் சென்றோம்.

பாரிசின் புறநகராகிய ‘சேவ் என்ற நகரில், ஆசிரியர் பயிற்சிக்

கல்லூரி ஒன்றில் வரலாறு பற்றிய யூனெஸ்கோ கருத்தரங்கம் நடந்தது.

அந்த இடத்தைத் தேடிச் சென்றோம். பிரெஞ்சு மொழி தெரியாதது மிகவும் இடையூறாக இருந்தது.

வாடகைக் காரோட்டி, மீட்டர் கணக்கு மேல் கட்டணம் கேட்டு வாங்கிக்கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/352&oldid=623275" இலிருந்து மீள்விக்கப்பட்டது