பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. பாரிசு வரலாற்றுக் கருத்தரங்கு

னது வரலாறு?

வரலாறு என்ற பெயரால் நாம் எதைக் கற்பிக்கிறோம்? அரசர்கள் - அவர்களுடைய மண்ணாசை - அதனால் விளைந்த படையெடுப்புகள் - போர்கள் - அழிவுகள்

எண்ணற்றோர் சிரம் அறுத்தல் - கணக்கில் அடங்காதவர்களின் கைகால் ஒடிதல் - கழுகுகளுக்கும் காக்கைகளுக்கும் இலவச விருந்துகள்

இன்னபிற கோரச் செயல்களே - கொலைகளே - கொள்ளைகளே - அபலைகளின் கண்ணிர் வெள்ளமே கற்பிக்கப்படுகின்றன.

சென்ற FF Trah’) வரலாறுகளில், போரும் கொலையும் பின்னிவிட்டதால், எதிர்கால வரலாறும் அதே வகையில் அமைய வேண்டுமா? தேவையில்லை.

ஊடலும் கூடலும் சேர்ந்தே குடும்ப வாழ்க்கை. அதில் ஒன்றை மட்டும் பிரித்துக்கூறல் குறை.

அதேபோல், போர்களும் கூட்டு முயற்சிகளும் இணைந்ததே உலக வரலாறு. அப்படியிருக்க, போர்களை மட்டுமே விவரிப்பது குறை: கேடு; பகையைப் பயிரிடுதல் ஆகும்.

முந்தைய காலங்களிலும் ஆக்கமான சிந்தனைகள், மக்கள் இன நன்மைக்கு உதவும் சாதனைகள் நிகழவில்லையா?

உலகின் ஏழு அற்புதங்களாகக் கருதப்படுபவை, மானுடத்தின் ஆக்கத்திறனின் கொடுமுடிகள் அல்லவா?

பேராறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டிய சாதனைகள் வரலாற்றில் இடம் பெற வேண்டாமா?

கண்கவர் கோபுரங்கள், சிற்பங்கள், ஒவியங்கள் முதலியவற்றிற்கு வரலாற்றில் இடம் இல்லையா?

நெடுஞ்சாலை அமைப்பு முறையைக் கற்றுத்தந்தது, போர்க்கன வெற்றிக்குக் குறைந்ததா?

சட்டத்தொகுப்பு நீதியை ஒருநிலைப்படுத்தும் வரலாற்றுச் சிறப்பு அல்லவா?

அறிவியல் கண்டு பிடிப்புகள், வரலாற்றின் அடையாளங்கள்

அன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/353&oldid=623276" இலிருந்து மீள்விக்கப்பட்டது