பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 நினைவு அலைகள்

நெடுந்துாரம்வரை படையெடுத்துக் கொன்று குவிக்காத, அமைதி யான நாடுகள்கூட, அண்டை நாடுகளின்மேல் போர் தொடுக்க வில்லையா?

அநேகமாக எல்லா நாடுகளுமே குற்றவாளிகள் என்பதால், திட்டமிட்ட கூட்டுக் கொலைகளாகிய, போர்களைப் போற்றிக் கொண்டே போகவேண்டுமா?

எத்தனையோ விலங்குப் போக்குகளை - தீய குணங்களை, மெல்ல மெல்லக் கை விட்டு முன்னேறி வரும் மாந்தர் இனம் வலுத்தவன் இளைத்தவனை அடக்கியாளும் முறையைக் கைவிடக் கற்றுக் கொள்வது உடனடித் தேவையல்லவா?

வாழ்வாய்; வாழவிடுவாய்’ என்பது அல்லவா உயிர் எண்ணம். ‘நாங்கள் அழிந்தாலும் அதற்குள் பகைவர்களைப் பூண்டோடு அழித்து விடுவோம்’ என்ற போக்கில் இயங்குவது தவறு அல்லவா?

இத்தகைய கேள்விகள், வரலாறு பற்றிய கருத்தரங்கில் எழுப்பப் பட்டன; விவாதிக்கப்பட்டன.

எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு, ஆலோசனைகள் கூறினர். எனக்கும் பேச வாய்ப்பு கிட்டியது.

கருத்தரங்கின் திசை

கருத்து அரங்கின் திசைகாட்டல் எப்படி அமைந்தது? மாந்தர் இனம், தனது நீண்ட பயணத்தில், பன்முறை போர்கள் என்ற பெயரால், தேவையற்ற இன ஒழிப்பில் ஈடுபட்டுள்ளது கசப்பான உண்மையாகும். அந்தக் கசப்பான உண்மையை மறைக்கத் தேவையில்லை.

போர்களைப் பற்றிச் சொல்லுகையில் அவற்றைப் போற்றிப் புகழ்ந்து பேசி, வம்புகளை, காழ்ப்புகளை, L/ GTP) 7, 95 &Try Gr, பழிவாங்குதலைப் பயிரிட்டுக்கொண்டே போவது அறிவுடைமை

ஆகாது.

மனித குலத்திற்கு நன்மையான கண்டுபிடிப்புகளைச் சில நாடுகளில் மட்டுமா காண்கிறோம்? பல நாடுகளிலும் காண்கிறோம்.

ஒரு நூற்றாண்டில் இல்லையென்றால், பிறிதொரு நூற்றாண்டில், மாந்தர் இனப்பிரிவு ஒவ்வொன்றும் செயற்கரிய செய்துள்ளது; இனியும் செய்யும்.

மனித நாகரிகம் என்பது பல கலவைகளின் விளைவு ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/354&oldid=623277" இலிருந்து மீள்விக்கப்பட்டது