பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரு து சுந்தரவடிவேலு 333

மக்கள் இனத்தைப் பண்படுத்த எத்தனையோ பிரிவினர் பாடுபட்டு, _தவி வந்துள்ளனர். இத்தகைய ஆக்கப் போக்குகளைப் போதிய அளவு விரிவாகச் சொல்வதில்லை.

அது இன்றைய வரலாற்றுப் பாடங்களில் உள்ள குறை. இக்குறை தொடரக்கூடாது.

வரலாறு என்பதை வெறும் அரசியல் நிகழ்ச்சிகளின் தொகுப்பாக மட்டும் கருதுதல் சரியல்ல.

வரலாறு என்பது ஒட்டுமொத்தச் சமுதாய இயக்கத்தின் பதிவுத் தொகுப்பு.

சமுதாய இயக்கம் அரசியல் போர்கள், போராட்டங்களை உள்ளடக்கி உள்ளதைப் போன்று, சமுதாய உறவுகள், முன்னேற்றங்கள், பொருளியல் ஈடுபாடுகள், அவை பற்றிய மாற்று முயற்சிகள் ஆகியவற்றையும் தன்னகத்தே கொண்டு பாய்வது ஆகும்.

வரலாற்றுப் பாடம் கற்பிக்கையில் சமுதாய, பொருளியல், பெருமுயற்சிகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு இப்போதிருப்பதைக் காட்டிலும் அதிக இடம் கொடுக்க வேண்டும் என்பது எல்லோருடைய விந்தனையாக இருந்தது.

நடைமுறை அரசியல், தற்கால சமுதாய இயல், பொருளியல், இவை பற்றிய மாறுபட்ட முயற்சிகளை வரலாற்று வகுப்புகளில் சொல்லிக் கொடுக்கலாமா? இதைப்பற்றிச் சற்று விரிவாகவே, விவாதித்தனர்.

இக்கால மாணவ மாணவிகளின் காதுகளில், நடைமுறை அரசியல் பொன்றவை வீழாமல் தடுக்க இயலாது.

கண்டவர் கண்டபடி அவை பற்றிச் சொல்லுவதைவிடப் பொறுப் புள்ள ஆசிரியரே இக் காலப் பெரும் நிகழ்ச்சிகள் பற்றிச் சொல்வதே சிறந்தது.

ஆனால், ஆசிரியர் நடைமுறை அரசியல், சமூக இயல், பொருளியல் பற்றிய தமது தனிப்பட்ட கருத்தைப் பிஞ்சு உள்ளங்களில் திணிப்பதற்குக் கிடைத்த வாய்ப்பாக அதை மாற்றிவிடக் கூடாது.

முக்கியமான நிகழ்ச்சிகளை, பெரும்போக்குகளைத் திரிக்காமல் சொல்லிவிட்டு, மாணாக்கரைச் சிந்திக்கவைப்பதே பொருத்தம்.

இத்தகைய கருத்துகளை வெளியிட்டோம். இதற்கு இயைந்த வகையில் வரலாற்றுப் பாடத் திட்டங்களை மாற்றி அமைக்கும்படி பரிந்துரைத்தோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/355&oldid=623278" இலிருந்து மீள்விக்கப்பட்டது