பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 நினைவு அலைகள்

பலன் உண்டோ? ஒரளவு உண்டு.

போர்களுக்கு அப்பாற்பட்ட பெரும் சாதனைகள், போக்குகள் ஒரளவு இடம்பெற்றுள்ளன.

இன்னமும் ஆக்க சிந்தனைகள் அதற்கு உரிய இடத்தைப் பெற்றதாகக் கூறமுடியுமா? கூறுவதற்கு இல்லை.

சோலையில் உலாவினோம்

பாரிஸ் கருத்தரங்கு கோடை காலத்தில் நடந்தது; மாலை அய்ந்து மணிக்குக் கூட்டம் முடியும். இரவு ஏழு, ஏழரை மணிவரை பகல் வெளிச்சம் இருக்கும். எனவே, அக்கம் பக்கத்தில் அமைத்து இருந்த சோலைகள், பூங்காக்களில் என் மனைவியும் நானும் உலாவி வருவோம். *

சில நாள்கள் வெளியில் விருந்துகளுக்கு எல்லோரையும் அழைத்துப் போவார்கள். -

வார்சேல் அரண்மனை உலகப் புகழ்பெற்றது. அங்கு அனைவரையும் அழைத்துச் சென்று காட்டினார்கள்.

பாரிஸ் மாநகரின் புகழ்பெற்ற மாதா கோயில்கள், பூங்காக்கள் அய் பல்கோபுரம் ஆகிய இடங்களுக்கும் அழைத்துக்கொண்டு போய்க் காட்டினார்கள்.

பிரெஞ்சு மக்கள்

ஒரு முறை, இருநாள் சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது நகரங்களோடு நாட்டுப்புறங்களையும் காண நேர்ந்தது.

பிரெஞ்சு மக்கள் சிற்றுண்டிச் சாலைகளுக்குள் அடைபட்டு, தேtைர், மது முதலியன அருந்துவதில்லை. பெரும்பாலும் திறந்த வெளியில் குடையை நிறுத்தி அதன் நிழலில் அமர்ந்து குடிப்பதையும் உண்பதையும் கண்டோம்.

கலைப் பிரியர்களாகிய பிரெஞ்சுக்காரர்கள் நிற வேற்றுமை பாராட்டுவதில்லை.

ஆப்பிரிக்க நாட்டு மக்க., பிரெஞ்சு வெள்ளையர்கள்ோடு மிகத் தாராளமாகப் பழகுகிறார்கள்.

‘விடுதலை, சமத்துவம், உடன்பிறந்த உணர்வு’ ஆகிய முப்பெரும் கொள்கைகளை உலகிற்கு அளித்த பெருமை பிரான்சு நாட்டிற்கு உரியதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/356&oldid=623279" இலிருந்து மீள்விக்கப்பட்டது