பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நை ந்த ரவ டி. வே gy/ 341

அவை அந்த நாட்டின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்துள்ளதைக்

-ாாலாம்.

பழஞ்சுவடிகள் பாதுகாப்பு

நாம், நம் பழஞ்சுவடிகளைப் பதினெட்டாம் பெருக்கில் ஆறுகளில் மட்டு, அறியாமையால் அழித்தோம்.

ஆனால், இந்திய மண்ணில் சிறு பகுதிகளைச் சில நூற்றாண்டு ஆண்ட பிரெஞ்சுக்காரர்களோ, இங்கிருந்து, பல ஏட்டுச் சுவடிகளைப் பத்திய மாகக் கொண்டு சென்று, தங்கள் நாட்டில் பாதுகாத்து வைத்திருந்தார்கள்.

பாரிசில் உள்ள ‘சோபோன் பல்கலைக் கழக நூலகத்தில், அரிய தமிழ் எட்டுச் சுவடிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

தமிழர்கள், மொழித் தீண்டாமைக்குத் தலைமுழுக்குப் போட்டு விட்டு, பிரெஞ்சு போன்ற மொழிகளைக் கற்று, அங்குள்ள அருஞ்சுவடி களை, நூல்களை ஆயும் நிலையும் ஒருநாள் வருமோ என்று ஏங்குகிறது ான் உள்ளம்.

நமக்குள்ளேயே வடமொழி தென்மொழிச் சழக்கிலேயே ‘வட்டங்கள் இட்டும் குளமகலாத மணிப் பெருந்தெப்பமாக ‘க் பெ_ப்பது நல்லதா?

புதிய திசைகளிலே நம்முடைய பழைய தொடர்புகளைத் தேடிக்கொண்டால் நல்லதா?

மனித நேய ஒருமைப்பாட்டை வளர்ப்பதில் முன்னோடிகளாவது காலத்தின் கட்டாயம் அல்லவா?

மது அருந்தாத பேராசிரியர்

பாரிசு கருத்தரங்கிற்கு வந்த அறிஞர்களில் என்னைப் போன்று “கிறுக்கர் ஒருவர் இருந்தார்.

ஆஸ்திரேலியாவில் வரலாற்றுப் பேராசிரியராக விளங்கியவர் அவர். ‘போதை தராத மதுவைக்கூட தொடவில்லை.

‘ஒயின் வகையில் சிவப்பு ஒயின் போதை இல்லாதது; அதைக் குடிக்கலாம் என்று அவரைப் பலரும் விழுந்து விழுந்து உபசரித்தனர். அவரோ தண்ணிர் மட்டுமே அருந்தினார். எங்களுக்கும் ஒரு துணை கிடைத்தது என்று மகிழ்ந்தோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/357&oldid=623280" இலிருந்து மீள்விக்கப்பட்டது