பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 345

‘எவ்வளவு பெரியவர் எவ்வளவு அன்பாகப் பழகுகிறார்; அந்த அம்மாளுக்குச் சிறிதும் கருவம் இல்லை, பாருங்கள்’ என்று என் மனைவி காந்தம்மா மதிப்புரை கூறினார்.

மலைக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடு புரிந்தது.

அன்பு செய்வீர்

‘அன்பு செய்தல்; பிறர்பால் ஆருயிர்கட்கெல்லாம் அன்பு செய்தல்: இது மனித உயிர்களுக்கே சாத்தியம். உடலினால் சிறிய மனிதன் - உள்ளத்தால் உயர்ந்து நிற்பதற்கு ஆணிவேர் இந்த அன்பெனும் அமிழ்தமே ஆகும்.

‘அன்பு செய்தலே மானுடத்தின் உயர்வு; அன்பு செய்தலே வாழ்வின் ஒளி: அன்பே - பேரன்பே - புத்தராக - ஏசுவாக - தாமியன் பாதிரியாக - ஆல்பர்ட் சுவைட்சராக, காந்தி அடிகளாக ஒளிவிடுகிறது என்ற தெளிவு பிறந்தது. அத்தெளிவோடு தங்குமிடம் சேர்ந்தோம்.

44. ஹைடு பூங்காவில் பேச்சுரிமை

ஜினிவா சென்றோம்

சுவிட்சர்லாந்தில் லூசேனைப் பார்த்த பிறகு என் மனைவியும் நானும் ஜினிவா நகருக்குச் சென்றோம். அங்கும் நல்ல ஒட்டலில் தங்கினோம். கவலையற்றுப் பல அருங்காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தோம்.

ஜினிவா பெரியதொரு ஏரிக்கரையில் அமைந்த நகரம். உலக நிறுவனங்கள் சில அங்கே அமைந்துள்ளன. இது அனைத்துலக நகரங்களில் ஒன்றாகும்.

நகரின் முக்கியமான பகுதியில் மலர்க்கடிகாரம் அமைக்கப் பட்டுள்ளது; அது நிலத்தடியில் இருந்து இயங்குகிறது; கடிகாரமுகம் மலர்களால் ஆனது.

அது பல்லாண்டுகளாகச் சரியான நேரம் காட்டிக் கொண்டிருப்பது அருங்காட்சியாகும்.

அக்காட்சியைக் கண்டு வியப்போர் கூட்டத்தை இரவு நெடுநேரம் 1 || காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/361&oldid=623285" இலிருந்து மீள்விக்கப்பட்டது