பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 நினைவு அலைகள்

காந்தம்மாள் காரோட்டப் பயிற்சி பெற்றார்

என் மனைவி காந்தம்மா காரோட்டக் கற்றுக்கொள்ள விரும்பினார். காரோட்டப் பயிற்றுவிக்கும் நிலையத்தில் சேர்ந்து பழைய கார்

ஒன்றை ஒட்டிப் பழகினார்.

இலண்டன் நகரத் தெருக்களில் நன்றாகவே பயிற்சி பெற்றார்.

காரோட்டும் உரிமம் பெறுவதற்குமுன், வெளியூர் செல்ல நேர்ந்தது.

திரும்பி வந்தபின், பாக்கி உள்ள பயிற்சியைப் பெற்று உரிமத்தைப் பெறுவதென்றே முடிவோடு பயணத்தைத் தொடங்கினோம்.

திரும்பி வந்த பிறகு போதிய நேரம் கிடைக்கவில்லை.

ஹைடு பூங்கா

இலண்டனில் சிறிதும் பெரியதுமாகப் பல பூங்காக்கள் உள்ளன. அவற்றில் பெரியது ‘ஹைட் பூங்கா என்பதாகும்.

கடுங்கோடையிலும் அது குளுகுளு என்றிருக்கும் அது வானுயர் மரங்கள் செறிந்தது. பரந்த புல் வெளிகள் கொண்டது.

ஆங்காங்கே உட்கார்ந்து இளைப்பாற இருக்கைகள் கொண்டது. குப்பை கூளங்கள் இல்லாமல், துய்மையாக இருக்கும்; மலர்களைக் குழந்தைகள் கூடப் பறிப்பதில்லை.

அவ்வளவு கட்டுப்பாட்டில் அந் நாட்டுக் குழந்தைகள் வளர்க்கப்படு கின்றன.

அந்த ஹைட் பூங்காவின் ஒரு மூலை வரலாற்றுச் சிறப்புடையது. எவ்வகையில்? பேச்சுரிமையை நிலைநாட்டிய நிலம் என்ற வகையில்.

ஆங்கிலேயருடைய பாராளுமன்ற (LD GRD TO , பிற பாராளுமன்றங்களின் தாய் என்று கருதப்படுகிறது.

அம்முறை எளிதில் உருவாகிவிடவில்லை. பல தியாகிகள் அரும்பாடுபட்டு உருவாக்கினார்கள்.

பாராளுமன்ற மக்களாட்சி முறை நடைமுறைக்கு வருமுன், கட்டுகளற்ற கோனாட்சி முறையில் அந் நாடு ஆளப்பட்டது.

‘மன்னர், ஆண்டவன் அருளால் அப்படிப் பிறந்திருக்கிறார். எனவே, அவருக்கே எல்லா உரிமைகளும் உண்டு இப்படிப்பட்ட கருத்தே நெடுங்காலம் கோலோச்சியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/364&oldid=623288" இலிருந்து மீள்விக்கப்பட்டது