பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ து. சுந்தரவடிவேலு - 349

-

பிரிட்டானியர் மன்னராட்சியிலிருந்து மக்களாட்சிக்கு மாறும் பொருட்டு, நீண்ட போராட்டம் நடத்த நேர்ந்தது அதில் எண்ணற்றோர் துன்பப்பட்டனர். உயிரிழந்தோருக்கும் குறைவு இல்லை.

இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில், சென்னை நிருவல்லிக்கேணி கடற்கரை - திலகர் கட்டடம் - பயன்பட்டதுபோல், பிரிட்டானிய மக்களின் உரிமைப் போராட்டத்தின்போது, ‘ஹைட் பூங்கா பயன்பட்டது. இன்றும் பயன்பட்டு வருகிறது.

எதைப்பற்றியும் பேசலாம்

அப் பூங்காவின் குறிப்பிட்ட மூலைப் பகுதியில், எவரும் எவருடைய அனுமதியும் கோராமலேயே, எதைப் பற்றியும் பேச உரிமை உண்டு.

அங்கே மேடை போட்டுப் பேசக்கூடாது; ஒலிபெருக்கி வைத்து, அதன் வாயிலாகப் பேசக்கூடாது.

ஒருவர் ஒலிபெருக்கி வாயிலாகப் பேசினால், அது அக்கம்பக்கப் பேச்சாளர்களுக்கு இடையூறாகும் என்பதால் இக் கட்டுப்பாடு மட்டும் உண்டு.

ஞாயிற்றுக் கிழமைகளில், அத்தகைய பேச்சுகள் நிறைய இருக்கும் என்று கேள்விப்பட்டோம்; ஒரு ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் அங்குச் சென்றோம்.

சமயப் பேச்சுகள்

பூங்காவினுள் நுழைந்ததும், சிறிய மரப்பெட்டியின்மேல் நின்று பேசிக் கொண்டிருந்த ஒருவரைக் கண்டோம். அங்கே சிறிது நேரம் நின்று பேச்சைக் கேட்டோம்.

‘மாந்தர் இனத்தைக் காப்பாற்றி அருள, ஆண்டவர் இரட்சகரை அனுப்பப்போகிறார். அவரை வரவேற்க ஆயத்தமாதல் வேண்டும். புனிதமடைதல், பிறர்க்குதவுதல் போன்ற நற்செயல்களினால் ஆண்டவரின் துதரை வரவேற்கப் பக்குவப்படுத்திக் கொள்வோம்’ இது யூத போதகரின் கருத்துரை.

சில மீட்டர் தொலைவில் வேறொருவர் பேசிக்கொண்டிருந்தார். அவ்விடத்திற்குச் சென்றோம். அவருடைய உரையைக் கேட்டோம். ‘ஆண்டவரின் துரதர் வந்துவிட்டார். மக்களின் பாவங்களை எல்லாம் தாமே ஏற்றுக்கொண்டு சிலுவையில் மாண்டார். அவர் என்றும் அழியாதவராக இருக்கிறார். அவரைக் கர்த்தராக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/365&oldid=623289" இலிருந்து மீள்விக்கப்பட்டது