பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரு. து சுந்தரவ டி. வேலு 351

‘அறுபது இலட்சம் வாக்குப்பெற்று வெற்றிபெற்று, ஆட்சிக்கு வருவதற்குப் பதில் மொத்தத்தில் ஆறாயிரம் வாக்குகளே பெற்று,

பெரும்பான்மையாகி, ஆட்சிக்கு வரும்போது, ஆணவம் குறைந்து விடும்; மக்கள் சிந்தனைக்கு மதிப்பு உயரும்; மக்கள் மதிக்கப்படு வார்கள்’ என்று பதில் உரைத்தார்.

ஆங்கிலேயரின் அரசியல் விவகாரம் நமக்கு வேண்டாமென்று எண்ணி, அடுத்த பேச்சாளர் பக்கம் சென்றோம்.

அங்கே இருபத்தைந்து பேர்களுக்குமேல் கூடிநின்று பேச்சைக் கெட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு வெள்ளையர் பேசிக் கொண்டிருந்தார்.

‘உலகில் எந்த நாட்டிற்கும் இன்னொரு நாட்டை ஆளும் உரிமை யில்லை; காலந்தாழ்த்தாது, காலனிகளை வைத்து இருக்கும் அப்ரோப்பிய அரசுகள் அவற்றிற்கு விடுதலை கொடுத்து விட வேண்டும்’ - இது அவருடைய பேச்சின் சாரம்.

குருதியைக் குடிப்போம்

அதே இடத்தில் வெள்ளையருக்குப்பின், ஆப்பிரிக்கர் ஒருவர் பேசினார். எடுத்த எடுப்பிலேயே கனல் வீசப் பேசினார்.

‘ஆப்பிரிக்காவிற்கு வந்த மதக்குருக்கள், வல்லரசுகளின் கையாள் களாகவே செயல்பட்டிருக்கிறார்கள். அய்ரோப்பிய முதலாளிகளுக்கு மலிவான தொழிலாளிகள் தேவைப்பட்டார்கள். அவர்கள் ஆப்பிரிக்க நாடுகளில் நிறையக் கிடைப்பார்கள் என்பது உலகறிந்த செய்தி.

‘'சூது வாது அறியாத ஆப்பிரிக்க மக்களை மயக்கி, மலிவான கூலிகளைத் திரட்டித் தரும் கங்காணிகளாகவே வெள்ளை நிறக் கிறுத்தவ போதகர்கள், ஆப்பிரிக்காவிற்கு வந்தார்கள்.

‘மதத்தைப் பரப்பும் திரைமறைவில், வெள்ளை முதலாளிகளுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். இதை நீடிக்கவிடமாட்டோம்.

‘இனி வெள்ளையர் எவராவது ஆப்பிரிக்க நாடொன்றில் காலெடுத்து வைத்தால், அவர் கழுத்தை அறுத்துக் குருதியைக் குடிப்போம்’ என்றார்.

கேட்டுக்கொண்டிருந்தவர் அனைவரும் வெள்ளையர்கள். அவர் களுடைய முகங்களில் வெகுளியோ, அதிர்ச்சியோ சிறிதும் தென்படவில்லை.

அவ்வமயம் எங்களுக்கு முன்னே, இளந்தம்பதிகள் நின்று கொண்டிருந்தார்கள். கணவர் மனைவியைப் பார்த்து, ‘நாம் வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/367&oldid=623291" இலிருந்து மீள்விக்கப்பட்டது