பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நை ‘Wol. wo, டிவேலு 353

அந்தந்த வீட்டின் வெளி வாயிலில் பண்டங்களை வைத்து விட்டுப் பொவார்கள்; வாடிக்கைக்காரர் பெயரைச் சீட்டில் எழுதி உடன் வைத்துவிட்டுப் போவார்கள்.

அநேகமாக வீட்டின் வெளி வாயில் நடைபாதையை ஒட்டியே பிருக்கும்.

அங்கு வைத்த பொருள்களை, வழிப்போக்கர் தொடுவதில்லை. காலாற நடந்துவரும் சிறுவர் சிறுமியரும் தொடுவது இல்லை.

தன்னுடையது அல்லாத எப்பொருளையும் தொடாத ஒழுக்க நெறி, பரவலாக இருக்கக் கண்டோம். இது போற்றற்குரியதாகும்.

உணவுப் பற்றாக்குறை காரணத்தால், வயது வந்தவர்களுக்கு ஆளுக்கு வாரத்திற்கு மூன்று முட்டைகளே பங்கீடாகக் கிடைத்த காலத்தில் நாங்கள் இங்கிலாந்தைக் கண்டோம்.

புலால், மீன், சீனி போன்றவையும் பற்றாக்குறை அளவே கிடைத்தன; கள்ளச் சந்தையில் எதையும் வாங்க முடியாத நிலை.

அந் நெருக்கடியிலும் எவரும் பிறர் பொருளைத் திருடாதிருந்ததையும் கடைக்காரர்கள் நாணயமாக நடந்ததையும் போற்றுவதற்குச் சொற்கள் போதா.

நாளிதழ்கள், வார இதழ்கள் போன்றவற்றை ஒர் ஆள் இருந்து விற்பதில்லை.

அவற்றை, மக்கள் நடமாட்டம் உள்ள சில இடங்களில் தெரு மூலைகளில் அடுக்கி வைத்து விடுவார்கள்.

பக்கத்தில், திறந்த சிறு அட்டைப் பெட்டியை வைத்துவிட்டுப் பொய்விடுவார்கள்.

தேவைப்படுவோர், இதழை எடுத்துக்கொண்டு அதற்கு உரிய _ாசைப் பெட்டியில் போட்டுவிட்டுப் போவார்.

சில மணிகளுக்குப் பிறகு, நாளிதழ்களை வைத்தவர் அங்கு வந்து, விற்காதவற்றையும் விற்றவற்றிற்கான காசையும் எடுத்துக்கொண்டு பொவார்.

பொது மக்கள் மோசடி செய்யாதது போலவே, அவ்விதழ்களைக் கொண்டு போவோரும் நாலுகாசு ஒளித்து வைத்துக் கொள்ளாமல் அவ்வளவையும் ஒப்படைப்பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/369&oldid=623293" இலிருந்து மீள்விக்கப்பட்டது