பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடது. சுந்தரவடிவேலு 21

‘அத்தகைய சிதைந்த செய்தி மேலிடத்திற்கு எட்டும் வேளை, என்னை மண்டலக் கல்வி ஆய்வாளராக நியமிக்கலாம் என்ற குறிப்பு ஆலோசனையில் இருந்ததாம். நம்பிக்கை இழந்த மேலிடம், என்னை விட்டுவிட்டு, அடுத்தவருக்குப் பதவி உயர்வு தந்துவிட்டது.

“இரகசியத்தை அறிந்த சர்மெவரல் ஸ்டேதம், எனக்குத் தெரியாமல் தன்னிச்சையாக, இதைப் பற்றி ஆய்ந்து பார்த்தாராம். என்மேல் சுமத்தப்பட்ட பழி ஆதாரமற்றது என்று தெரிந்துகொண்டார். உரிய ‘ஆலோசகரிடம் எடுத்துச் சொல்லி, எனக்குச் செய்த தீங்கைத்துடைக்க முயல்கிறார் என்று கேள்வி.

‘பலிக்க வேண்டும் என்பது என் விழைவு: விழைவுகள் பலித்து விடுமா?

‘ஒரே ஒரு ஆறுதல். இதனால் நம் இயக்குநர் என்னை மேலும் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார். ‘

‘ஏன் அப்படித் திரித்துச் செய்தி அனுப்பப்பட்டது?”

சதியின் வேர்

‘'காவல்துறை சுருக்கெழுத்தர் ஒருவருடைய மகன், ஈரோட்டில் அந்தக் குறிப்பிட்ட உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தான். ஆண்டுத் தேர்வில் போதிய மதிப்பெண்கள் பெறவில்லை என்று நிறுத்தப்பட்டான்.

‘பிறகு, காவல்துறையின் பெரிய அலுவலர் ஒருவர், என்னை அணுகினார். தலைமை ஆசிரியருக்குப் பரிந்துரைத்து, அப் பையனை மேல் வகுப்பிற்கு அனுப்ப ஏற்பாடு செய்யவேண்டும் ‘ என்று சொன்னார். நான் இசையவில்லை.

‘அதை ஆழப் பதிய வைத்திருந்த காவல்துறை சுருக்கெழுத்தர் வாய்ப்பு கிடைத்தபோது, எனக்குக் கெடுதலான, தவறான, சிதைவுச் செய்தியை மேலிடத்திற்கு அனுப்பி விட்டார்.

‘இவற்றையெல்லாம் இயக்குநர் இரகசியமாகத் தெரிந்து கொண்டிருக்கிறார். எவ்வளவு திறமையாகவும் நேர்மையாகவும் பணிபுரிந்தாலும், சின்னவர்கள். தயவில், ‘பெரியவர்கள் வாழ வண்டிய காலத்தில் நாம் வாழும்படி நேர்ந்துவிட்டதே’ என்று கூறிப் பெருமூச்சு விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/37&oldid=623294" இலிருந்து மீள்விக்கப்பட்டது