பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. பிரிட்டனில் கல்வி முறை

இருட்டடிப்பு இல்லாத வரலாறு

பிரிட்டனில் நாங்கள் பார்த்தவற்றுள் ஒன்று, நூற்றாண்டிற்கு ஒருமுறை நடக்கும் பெரும் கண்காட்சியாகும்.

அது, அந் நாட்டின் எல்லாத் துறைகளையும் பற்றியதாக அமைந்திருந்தது. வரலாற்றுப் பகுதிக்குச் சென்றோம்,

வரலாற்றின் எந்தப் பகுதியும் இருட்டடிப்புச் செய்யப்படவில்லை.

பிரிட்டன் ஒரு காலத்தில், ரோமாபுரியினரால் வெல்லப்பட்டதையும், அவர்கள் ஆண்ட காலத்தையும் கொட்டை எழுத்தில் எழுதி வைத்திருந்தார்கள்.

ரோமாபுரியாருக்கு அடிமைப்பட்டதால், நெடுஞ்சாலை அமைப்பைக் கற்றுக் கொண்டோம்; எல்லார்க்கும் ஒரே நீதி கிடைப் பதற்கு ஏதுவாக, சட்டத் தொகுப்பு முறையைப் பெற்றோம். இப்படி இயம்பியது அப்பகுதி.

ஏன் அன்னியருக்கு அடிமையானார்கள்? ஆதியில், பிரிட்டன் ஒர் அரசின் கீழ் இல்லாமல் பல சிற்றரசுகளின் ஆளுகையில் இருந்தது. அதனால், வலிமை குன்றி இருந்தது: படையெடுப்பை முறியடிக்க முடியவில்லை.

காலத்தின் கட்டாயத்தால், பிரிட்டன் ஒரு குடைக்கீழ் வர நேர்ந்தது. அந்த ஒருமைப்பாடு வலுவூட்டியது: பேரரசாக வளர்வதற்கு வித்தாயிற்று.

மன்னரின் தனியாட்சியை எதிர்த்து நடந்த போராட்டங்கள், அடக்குமுறைகள் ஆகியவற்றின் படங்கள் வரலாற்றை உள்ளங்கை நெல்லிக்கனி எனக் காட்டின.

பிரிட்டானியக் கல்வி முறை

அந்த நாட்டுக் கல்வி பற்றிக் லே சொல்லுகிறேன்: பிரிட்டனில் வாழும் எல்லாப் பையன்களும் பெண்களும் பதினைந்து வயது முடியும்வரை கட்டாயம் படிக்க வேண்டும். வேலைக்குப் போகக்கூடாது. அதுவரை கல்வி இலவசம். பள்ளி இறுதித் தேர்வு பெற விரும்புவோர் பதினோராவது வகுப்பு படிக்க வேண்டும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/370&oldid=623295" இலிருந்து மீள்விக்கப்பட்டது